October 17, 2025
  • October 17, 2025
Breaking News
August 26, 2018

போட்டியின்றி திமுக தலைவராகும் மு.க.ஸ்டாலின் – கனிமொழி வாழ்த்து

By 0 1180 Views

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தபடி இன்று நடைபெற்றது.

இதில் இதுவரை செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல, துரை முருகனும் தனது வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

DMK Nomination Still

DMK Nomination Still

இதனை அடுத்து, அவர்கள் வேட்புமனுவை அண்ணா அறிவாலயம் வந்து அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் தாக்கல் செய்தனர். வேட்பு மனுத் தாக்கல் செய்த ஸ்டாலினுக்கு கைகொடுத்து, முத்தமிட்டு வாழ்த்தினார் அவரது தங்கையான கனிமொழி.

ஸ்டாலினை 65 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இவர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாகவே கொள்ளலாம்