September 14, 2025
  • September 14, 2025

Simple

காலக்கூத்து விமர்சனம்

by on May 27, 2018 0

காலம் சிலரின் வாழ்வில் மட்டும் எப்படிக் கொடுமையாக நடந்து கொள்கிறது என்று சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் எம்.நாகராஜன். சிறிய வயதிலேயே தன் பெற்றோரைப் பறிகொடுக்கும் பிரசன்னா, தன்னைப் போலவே தன் பிறந்த நாளில் அம்மாவைப் பறிகொடுக்கும் கலையரசனின் உற்ற நண்பனாகிறார். இந்த நட்பு அவர்கள் வாலிபம் வரை தொடர்கிறது. அப்பாவுடன் வாழ்ந்து வரும் கலையரசனும் தன் சகோதரன் போலவே பிரசன்னாவை நடத்தி வர, இருவருக்கும் காதலும் முளைக்கிறது. பிரசன்னா சிருஷ்டி டாங்கேவையும், கலையரசன் சாய் தன்ஷிகாவையும் காதலிக்கிறார்கள். […]

Read More

தூத்துக்குடி பலிகளுக்கு மக்கள் நீதி மய்யம் நீதி பெற்றுத்தரும் – கமல்

by on May 26, 2018 0

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது… “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு – இதுவரை தமிழகத்திலோ, இந்தியாவிலோ கேட்டும் அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்கத் துடிப்பதை இதற்கு முன் நாம் கண்கூடாகக் கண்டிருந்தாலும், தூத்துக்குடியில் நடைபெற்றதைப் போல காவல்துறை மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு […]

Read More

ராஜ் டிவியில் ஒரேநாளில் தொடங்கும் 5 புதிய தொடர்கள்

by on May 26, 2018 0

சின்னத்திரை உலகில் கடந்த ஐந்து வருடங்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் செயலாற்றி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமானது ‘ஸ்ரீ பாரதி அசோசியேட்’ நிறுவனம். ‘ஸ்ரீ பாரதி குரூப்’பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகமான நெடுந்தொடர்களைத் தயாரித்து ராஜ் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி, ரேடியோ மிர்ச்சி என முக்கிய சேனல்களில் ஒளிபரப்பி வருகிறது. இந்நிறுவனம் தயாரித்துள்ள ‘உறவுகள் சங்கமம்’ மெகா தொடர், சீரியல் வரலாற்றிலயே முதன்முறையாக அதிகப்படியான (40) […]

Read More

மே 28-ல் 50 சதவிகித கட்டண சலுகை தரும் நியூ ஹோப்

by on May 26, 2018 0

மே மாதம் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் நல தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி அன்றைய தேதியில் மருத்துவ பரிசோதனைக்கு வரும் அனைத்துப் பெண்களுக்கும் 50 சதவீதம் அளவிற்கான கட்டண சலுகையை அறிவித்திருக்கிறது சென்னையில் இயங்கி வரும் ‘நியூஹோப் மருத்துவமனை.’ இது தொடர்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன் ஹெர்குலீஸிடம் கேட்டபோது, “1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் தேதியன்று அனைத்து வயதிலும் உள்ள மகளிருக்கான […]

Read More

சென்ட்ரல் வழித்தட மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம்

by on May 25, 2018 0

சென்னையில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு இரண்டு வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகளில் 28 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்து நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.. சென்ட்ரலில் இருந்து விமான […]

Read More

கர்நாடகா – நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

by on May 25, 2018 0

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். மந்திரி சபையில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் உள்ளிட்டு மந்திரிகள் பதவியேற்க உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், குமாரசாமி […]

Read More