மணிரத்னத்தின் பாசறையில் பயின்ற இயக்குனர் கண்ணன் ‘பர்ஃபெக்ஷனை’ விரும்புபவர் என்பதில் ஆச்சரியமில்லை. ஷூட்டிங்கில் மட்டுமல்லாமல் போஸ்ட் புடக்ஷனில் டப்பிங் பேசுவதில் கூட ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவரை டப்பிங் பேசவைப்பதை அவர் விரும்புவதில்லை. அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேசச் சொல்லி வலியுறுத்துவார். தன் முதல் படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்திலேயே பாவனாவை டப்பிங் பேச வைத்தவைத்தவர் அவர். இப்போது கண்ணன் இயக்கி முடித்திருக்கும் ‘பூமராங்’ படத்தில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் மேகா ஆகாஷைத் […]
Read Moreநாளை (22-06-2018) விஜய்யின் பிறந்தநாளாக இருக்க, அவர் ரசிகர்களுக்கான அவரது பரிசாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 62வது படத்தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியான நேரம் முதலே வைரலாகிவிட்ட ‘சர்கார்’ படத்தலைப்பு ஒருபக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும், இன்னொரு பக்கம் இப்போதைய ட்ரெண்டான ‘ட்ரோல்’ செய்யப்பட்டும் வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்க, இந்த டீமுடன் பாடலாசிரியர் விவேக்கும் இணைந்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான்-விவேக் கூட்டணியில் உருவான ‘ஆளப்போறான் தமிழன்’ உலகமெல்லாம் கொண்டாடப்பட்ட நிலையில் ‘சர்காரி’ல் […]
Read Moreதமிழ்ப்படங்களுக்கு டைட்டில் வைப்பதென்பது எள்ளின் தோலை உரித்து அதன்மேல் ஈயம் பூசுகிற வேலை. அதனால் இருக்கிற தலைப்புகளையே எடுத்து வைத்து ரசிகர்களைத் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள். வித்தியாமாக தலைப்பு வைக்கிறேன் பேர்வழி என்று வதைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்னொரு புறம். இதில் சொந்தமாக எல்லோருக்கும் பிடிக்கிற தலைப்பைப் பிடிப்பவர்கள் வெகு சிலரே. அது கதைக்கும் பொருத்தமாக இருக்க வேண்டுமென்பதுதான் மிக முக்கியம். அந்த வகையில் இயக்குநர் வித்யாதரன் தன் படத்துக்கு ‘இட்லி’ என்று தலைப்பு வைத்துள்ளார். காமெடி த்ரில்லர் ஜேனரில் […]
Read Moreஅரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்த கமல், பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்த கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். தேர்தல் ஆணையமும் கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் ஏதும் இருந்தால் தெரிவிக்க அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், எந்த ஆட்சேபமும் வரவில்லை. இந்நிலையில் அவரை இன்று தேர்தல் […]
Read Moreசென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோருடன் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் குற்றசாட்டுக்கு ஆளானதை அடுத்து டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மற்றொரு சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
Read More