January 22, 2025
  • January 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் உறியடி விஜய்குமார்
September 20, 2018

சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் உறியடி விஜய்குமார்

By 0 1138 Views

’36 வயதினிலே’, ‘பசங்க-2′, ’24’, ‘மகளிர்மட்டும்’ ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வரை சமூக நோக்கிலான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். ‘உறியடி’ படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இவர், தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியனுடன், தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் சார்பில் மற்றுமொரு இணை தயாரிப்பாளராகவும் இணைகிறார் விஜய்குமார்

Vijaykumar

Vijaykumar

இந்தப்படத்தில் நாயகனாக விஜய்குமாரே நடிக்கிறார். நாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார்.. ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ‘உறியடி’யில் கவனம் ஈர்த்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்துவரும் ’96’ படத்திற்கு இசையமைத்துள்ள கோவிந்த் மேனன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். உறியடி படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரவீண் குமார் இந்தப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகிறார்.

சமூகத்துக்கு தேவையான ஒரு செய்தியுடன் அதேசமயம் பொழுதுபோக்கு அம்சங்களும் குறையாமல் இந்தப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.