January 30, 2026
  • January 30, 2026

Simple

சினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு – விஷால்

by on October 15, 2018 0

விஷாலின் 25வது படமாக ‘சண்டக்கோழி 2’ அமைவதும், அதை விஷாலே தயாரித்து அதில் நடிப்பதும், முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இயக்குவதும் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாகப் பேசினார் விஷால். “இந்தப் படத்தைப் பார்த்து முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையைத் தந்து […]

Read More

நான் நல்லவனா கெட்டவனா என்று இப்போது முடிவெடுக்காதீர்கள் – வைரமுத்து

by on October 14, 2018 0

நாடெங்கும் புயல் வீசிக்கொண்டிருக்கும் ‘மி டூ’ விவகாரத்தில் சமீபத்தில் கவியரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடுத்திருந்த பாலியல் குற்ற ச்சாட்டுகள் கவிஞரைப் பார்த்து ‘யூ டூ..?’ என்ற கேள்வியை முன்வைத்தது. அதற்கு டிவிட்டரில் காலம் பதில் சொல்லும் என்று கூறியிருந்த கவிஞர் இன்று காணொளியில் ஒரு விளக்கம் கூறியிருக்கிறார். அதிலிருந்து….   “என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்ற ச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. உள்நோக்கம் கொண்டவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்குத் […]

Read More

நல்ல கதை இருந்தால் படம் வெற்றி பெறும்-அமலா பால்

by on October 13, 2018 0

வணிக வெற்றியை சம்பாதித்திருக்கிறது  ராட்சசன் படம். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.   இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.   “நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது, ஆனாலும் இவ்வளவு […]

Read More

கூத்தன் விமர்சனம்

by on October 13, 2018 0

பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவர் தன் படத்துக்குப் போட்ட ஒரு ஏரியா செட்டை அப்படியே துணை நடிகர்களுக்குக் குடியிருக்க விட்டுவிட்டுப்போக, அந்த சினிமா நகரில் வசிக்கும் அத்தனைக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்கிற படம். கூடவே நடனத்தின் பெருமையையும் இன்னொரு பக்கம் சொல்லி இரண்டையும் முடிச்சுப் போட்டு ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.வெங்கி. 32 டேக் வாங்கும் துணை நடிகை என்று பெயரெடுத்த ஊர்வசியின் மகன் ராஜ்குமார்தான் படத்தின் ஹீரோ. அவருக்கு நடனமாட ஆசை. ஆனால், முறையாக நடனம் […]

Read More