ஜித்தன் ரமேஷ் ஐந்து அறிமுக கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ‘ஒங்கள போடணும் சார்…’ இந்தத் தலைப்பை நினைவிருக்கிறதா..? ‘நானும் ரௌடிதான்’ படத்தில் வில்லன் பார்த்திபனைப் பார்த்து நயன்தாரா பேசிய வசனம் இது. இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், “நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்க, இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது […]
Read More‘காதல் முன்னேற்ற கழகம்’ என்ற வித்தியாசமான தலைப்பு கொண்ட படத்தை ‘ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன்’ மலர்க்கொடி முருகன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைத்திருக்கிறார் பி.சி.சிவன் பாடல்களை யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியத்துடன் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனமும் இவரே. இந்தப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. […]
Read Moreநடிக்க வந்துவிட்டால் என்ன வேடம் என்றாலும் ஏற்று நடிக்க பலர் தயங்குவதில்லை. ஆனால், சிலர் இப்படித்தான் நடிப்பது என்று வரையறை வகுத்துக்கொண்டு நடித்து வருவதும் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது நதியா சம்பந்தப்பட்ட செய்தி. நதியாவைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவர் ஹீரோயினாக இருந்தபோது எப்போதுமே தரக்குறைவான வேடங்களை எதற்காகவும் ஏற்று நடித்தது இல்லை. எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கட்டிப்பிடித்து நடிக்க மறுத்தவர். இப்போது குணச்சித்திர வேடங்கள் ஏற்று நடித்து வரும் நிலையிலும் தன் […]
Read Moreஇன்று அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. கல்பாத்தி அகோரம் ஏஜிஎஸ் சார்பாக தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியலைக் குறிவைக்கிறதாம். விஜய் நடித்த படங்களிலேயே அதிக செலவில் பிரமாண்டமாகத் தயராகும் இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இப்போதே உறுதி அளித்திருக்கிறார்கள். ஆக, இப்போது பொங்கலுக்கு ரஜினியும், அஜித்தும் மோதியதைப் போல் வரும் தீபாவளிக்கு விஜய்யுடன் மோத இன்னொரு பெரிய ஹீரோவின் படத்தை எதிர்பார்க்கலாம். […]
Read More