January 30, 2026
  • January 30, 2026

Simple

தேவ் திரைப்பட விமர்சனம்

by on February 14, 2019 0

காதல் கதைகளில் பெரும்பாலும் ஏழைக்கும் பணக்காரனுக்குமான காதலே முதலிடம் பிடிக்கும். ஆழமான காதல் என்றால் அது பெரும்பாலும் ஏழைகளுக்கிடையில் வருவதாகவே இருக்கும். உலகம் முழுக்க சினிமாவில் இதுவேதான் நிலை. ஆனால், இந்தப்படத்தில் பணக்காரர்களுக்கான காதலைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர். பெரிய தொழிலதிபரின் மகன் கார்த்திக்கு தன் மனம் போல் வாழப் பிடித்திருக்கிறது. கூடவே சாதிக்க வேண்டுமென்ற ஆவலும் இருக்கிறது. இன்னொரு பக்கம் தன் தந்தையின் மீதான வெறுப்பால் ஆண்கள் மேல் நம்பிக்கையில்லாமல் இருக்கும் இளம் […]

Read More

த்ரிஷா சிம்ரன் இணைந்து ஆக்‌ஷனில் இறங்கும் படம்

by on February 14, 2019 0

‘ஆல் இன் பிக்சர்ஸ்’ சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.   96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை  இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.   படத்தைப் […]

Read More

சித்திரம் பேசுதடி 2 திரைப்பட விமர்சனம்

by on February 13, 2019 0

கதை ஒரே லைன்தான் – ‘நல்லவர்கள் வாழ்வார்கள், கெட்டவர்கள் வீழ்வார்கள்…’ ஆனால், இதைத் திரைக்கதைப் படுத்துவதற்கு இயக்குநர் ராஜன் மாதவ் ரொம்பவே மெனக்கட்டிருக்கிறார். அப்படி என்ன மெனக்கெடல் என்கிறீர்களா..? வாருங்கள்… பார்க்கலாம். விதார்த், அஜ்மல், அசோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், பிளேட் சங்கர், வெற்றி, ஆடுகளம் நரேன், பஞ்சு சுப்பு, அழகம்பெருமாள், ஐசக், செவ்வாளை… ராதிகா ஆப்தே, காயத்ரி, நிவேதிதா, பிரியா பானர்ஜி… உஸ்… அப்பாடா..! இத்தனைபேரும் படத்தில் வரும் கேரக்டர்கள். அத்தனி பேருக்கும் தனித்தனியாக […]

Read More

ஓவியாவின் 90 எம்எல் அதிகாலைக் காட்சி – வீடியோ

by on February 13, 2019 0

உச்ச ஹீரோக்களின் படங்கள் மட்டுமே அதிகாலைக் காட்சிகள் நடத்துவார்கள். அவர்களுக்குப் போட்டியாக இப்போது ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் கெட்ட வார்த்தைப் படமான 90 எம்எல் படத்தையும் அதிகாலை 5 மணிக்கு முதல்காட்சி வெளியிடவிருக்கிறார்கள். அதை அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவிலேயே தெளிவாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஒரு படத்தை அதிகாலையில் பார்க்கும் சமூகம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். படம் வெளியாகும் பிப்ரவரி 22 இன்னும் என்ன கூத்துகள் அரங்கேறப் போகின்றனவோ..?

Read More