தீயிலிட்டு சாம்பலாக்கினாலும் அதிலிருந்து உயிர் பெற்று வரும் புராணகாலப் பறவையாக நம்பப்படுவது பீனிக்ஸ். அப்படி நசுக்க நசுக்க அதிலிருந்து உயிர்த்துக் கிளம்பும் ஒடுக்கப்பட்ட பிறவியாக இருக்கிறார் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதி. கதையின் களம் நாம் நன்கறிந்த வடசென்னைப் பகுதிதான். அதிலும் குத்துச்சண்டை பின்னணியை இன்னும் சில படங்களில் பார்த்திருக்கிறோம். எனவே விஜய் சேதுபதியின் பதின்வயது மகன் இதில் நாயகனாக அறிமுகமாகிறார் என்கிற ஆச்சரியத்தைத்தவிர வேறு எந்த முக்கியத்துவமும் படத்துக்கு முந்தைய எதிர்பார்ப்பில் இல்லை. ஆனால் இதெல்லாம் […]
Read Moreஇந்தியாவின் அடுத்த தொழில்முனைவோர் அலையை மேம்படுத்த சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது..! ஜூலை 03, 2025: இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், புதிய டாடா ஏஸ் ப்ரோவை அறிமுகப்படுத்துவதன் மூலம் சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கி, சிறிய சரக்கு போக்குவரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ₹ 3.99 லட்சத்தை மட்டுமே வெல்ல முடியாத தொடக்க விலையுடன், டாடா ஏஸ் ப்ரோ இந்தியாவின் மிகவும் மலிவு விலை நான்கு […]
Read Moreகுடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்து அனேக படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அதற்கெதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வந்த படங்கள் குறைவு. அந்த வகையில் தங்கள் கிராமத்தினர் வாழ்க்கையில் குடியேறி குடி கெடுத்த குடியை ஒழிக்க அந்த மண்ணின் மகள் குயிலி என்ன செய்தார் என்பதை பட்ஜெட்டுக்கு பங்கம் வராமல் தந்திருக்கிறார் இயக்குனர் பி.முருகசாமி. கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாத நாயகன் ரவிச்சா, நாயகி தஷ்மிகாவை இந்தப்படத்தில் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. அமைதியாக இருந்த கிராமத்தில் வில்லன் மதுவை இலவசமாக அறிமுகம் […]
Read Moreபடத்தின் தலைப்பே கதையைச் சொல்லி விடும். நடுத்தர வர்க்க மக்கள் பெரும்பாலானோரின் கனவு ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான். அப்படி… மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத்துடன் வசதிகள் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வரும் நடுத்தர வர்க்கத்து சரத்குமாரின் கனவு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் லட்சியமே சொந்த வீடு வாங்குவதாக இருக்கிறது. அதற்காக பட்ஜெட் போட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சரத்குமாரின் மகனான சித்தார்த்துக்கு படிப்பு சரியாக வரவில்லை. […]
Read Moreபடம் தொடங்கியதும் முரளி ராதாகிருஷ்ணன் ஒரு தற்கொலை முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. அதிலிருந்து சின்ன பிளாஷ்பேக் போனால் உழைப்பால் உயர்ந்த தொழிலதிபராக முரளி ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆனால் அவருக்கு காதல் உள்பட சுயநலம் எதுவும் இல்லை. இருந்தாலும் அவரிடம் வேலை செய்யும் நாயகி அவரை தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத முரளி தன் நண்பன் விஜய் கிருஷ்ணா ஒரு இசையமைப்பாளராக மாற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமே அவர் குறிக்கோளாக இருக்கிறது. […]
Read Moreபவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும் தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி டேயோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை […]
Read More