August 4, 2026
  • August 4, 2026

Simple

சென்னையில் செல்ப் டிரைவ் செய்த ரஜினி வைரலாகும் புகைப்படம்

by on July 20, 2020 0

இப்போதைய ஹாட் டாபிக் இதுதான். கடந்த ஒரு வாரமாக ரஜினிகாந்த் தனது காரை செல்ப் ட்ரைவ் செய்தபடி போயஸ் கார்டனில் இருந்து அவரின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஏன் செல்ப் டிரைவ்…? கொரோனா பரவல் காரணமாக டிரைவர்கள் யாரையும் இப்போது சொந்த உபயோகங்கள் கருதி அனுமதிப்பதில்லை யாம். அதனால் நீண்ட வருடங்கள் கழித்து தனது காரை இயக்கியிருக்கிறார். முக கவசம் அணிந்து, சீட் பெல்ட் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் காரை ஓட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Read More

அர்ஜுன் குடும்பத்தை தொடரும் கொரோனா சோகம்

by on July 20, 2020 0

நடிகர் அர்ஜூனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சார்ஜா சில வாரங்களுக்கு முன் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அந்த சோகத்தில் இருந்து அவர்கள் முடிவதற்குள் சிரஞ்சீவியின் சகோதரரான துருவா சார்ஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இந்த தகவலை ஐஸ்வர்யா அவரது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து தன்னுடன் கடந்த நாட்களில் பழகியவர்களை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் […]

Read More

லட்சுமி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்ட வனிதா விஜயகுமார் வீடியோ

by on July 20, 2020 0

சமீபத்தில் நான்காவது திருமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் பற்றி பிரபல நடிகையும் டிவி நிகழ்ச்சி நெறியாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விமரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து இருவரையும் சமரசம் செய்து வைக்க முன்னணி இணையதளம் ஒன்று முடிவு செய்தது. அப்போது இருவரும் நேரலையில் பேச விவாதம் வெடித்து புகையை கக்கியது. அதில் லட்சுமி ராமகிருஷ்ணனை பேசவே விடாமல் வனிதா விஜயகுமார் மோசமான வார்த்தைகளால் திட்டிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது அந்த வீடியோ கீழே… courtesy – Behindwoods.com

Read More

கொரோனா மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

by on July 19, 2020 0

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- “கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிப்பதற்கு அதிகாரப்பூர்வமான கோரிக்கையை விடுத்தால் அதற்கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது. கொரோனாவுக்காக மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசு ரூ.6,000 கோடி […]

Read More

அஜித் வீட்டில் வெடிகுண்டு புரளி சொன்னவனை அமுக்கி பிடித்த போலீஸ் – விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

by on July 19, 2020 0

நேற்று மாலை 4 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி விட்டு அவர் இணைப்பை துண்டித்து விட்டார். அது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை போலீசார் அஜித் வீடு அமைந்துள்ள காவல் எல்லையான நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து நீலாங்கரை போலீசார் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று […]

Read More