கொரோனா பாதித்த கோலிவுட் பிரபலங்களில் நடிகை ரோகிணியும் ஒருவர். இப்போது தொற்றிலிருந்து மீண்டு விட்டார் என்றாலும் எப்படி மீண்டேன் என்பதை நெகிழ்ச்சியான ஒரு பதிவாக இட்டு இருக்கிறார் அவர். அது கீழே… “இன்றுவரை இதை எழுதும் மனநிலையில் இல்லாமலிருந்தேன். ஆனால் பலரின் மருத்துவமனை அனுபவங்கள் வாசித்தபோது மௌனம் பாலிக்க இயலவில்லை. 27ஆம் தேதி எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்று வந்தது. இருமல், காய்ச்சலுடன் துவங்கியது. மூன்று நாட்கள் காய்ச்சலுக்கு மருந்தும், ஆவி எடுப்பது, நல்ல உணவு, கபசுரக்குடிநீர் […]
Read Moreசர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் “ஆன்டி இண்டியன்”. 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. […]
Read Moreதமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக பயணித்து வருபவர்கள் ஜேடி ஜெர்ரி. சினிமாவின் தொழில்நுட்பம் தெரிந்த இவர்களை மற்ற சினிமா இயக்குனர்களும் தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்வதுண்டு. இந்நிலையில் இந்த இருவரில் ஜெர்ரியின் தாயாரான சூசையம்மாள் இன்று காலை கொடைக்கானலில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 78. அதேபோல பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின தாயாரான எஸ்.முத்துலஷமி இன்று சென்னையில் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 88. I
Read Moreதமிழ் இலக்கிய உலகில் கரிசல் மண் சார்ந்தும் அதன் மக்களின் வாழ்க்கை சார்ந்தும் தனது படைப்பில் கொண்டு வந்ததவர் எழுத்தாளர் கிரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாக பெருமை பெற்றிருப்பினும் அனைத்து வட்டார இலக்கியங்களுக்கும் இவரை முன்னோடி என்றே கொள்ளமுடியும். 1922ஆம் ஆண்டு கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்த கி.ரா. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது வியப்புக்குரிய அம்சம். விவசாயத்தில் இருந்து தன் நாற்பது வயதில் இலக்கிய உலகுக்கு வந்தார். […]
Read Moreநினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி ஒன்று இன்று நம்மைச் சுற்றி மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன இந்தவாரம் அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் ஒரேநாளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கோலிவுட்டை பொறுத்த வரையில் கொரோனா மரணம் தினசரி நிகழ்வாகவே இருந்து வருகிறது. யாருமே எதிர் பார்க்காத நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக மறைந்தார். அவருக்கு மனைவியும், […]
Read Moreதமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூட்டினார். அப்போது ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இடம் பெற்றுள்ள எம்எல்ஏ க்கள் விவரம்… திமுக- எழிலன் அதிமுக- சி. விஜயபாஸ்கர் பாஜக- […]
Read More