ஹீரோ இல்லாத கதையில் ஹீரோயினே அந்த வேலையை ஏற்பதுதானே முறை..? அப்படி த்ரிஷாவே இந்த படத்தின் ஹீரோவாக… அதிலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய படம் இது. யாருக்கும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட நாயகி திரிஷா கதை நாயகியாக… பெயரும் அதற்கேற்றாற்போல் தையல் நாயகி என்ற பாத்திரம் ஏற்கிறார். படத்தில் அவர் யாருக்கும் அஞ்சாத பத்திரிகையாளர். ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை வடிவத்துக்கு அற்புதமான திரைக்கதை அமைத்து அதை உலகத் தரத்தில் உருவாக்கி இருக்கிறார் அவரது சீடரான இயக்குனர் […]
Read Moreஓடுகிற குதிரை ஒன்று கிடைத்துவிட்டால் போதும் எந்தப் பந்தயத்திலும் கலந்து கொள்ளலாம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் யுவன். அந்த ஓடுகிற குதிரை வேறு யாரும் அல்ல, உலகப் புகழ் பெற்ற நடிகை சன்னி லியோன் தான். அவர் மட்டுமல்லாமல் யோகி பாபுவும் உடன் இருக்க இந்த ப்ராஜெக்டை எந்த தயக்கமும் இல்லாமல் தயாரித்திருக்கிறார்கள் வா மீடியா சார்பாக வீர சக்தியும், சசிகுமாரும். தலைப்பிலேயே கோஸ்ட் இருப்பதால் இது எந்த விதமான படம் […]
Read Moreஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ், ஆனந்த் நாக், மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலேஜ் ரோடு. கல்லூரி வாழ்க்கையில் நாம் எல்லோரும் கடந்து வந்த நட்பு, காதல் போன்றவற்றை பிரதிபலிக்கும் படமாக காலேஜ் ரோடு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் தாண்டி இப்படம் தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு விஷயத்தை பேசுகிறது. பள்ளிப் படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் கல்லூரிப் படிப்புக்காக முதலில் நாடுவது கல்விக் கடன் தான். ஆனால் அனைத்து […]
Read Moreபெண்கள் விண்வெளிக்கே செல்லும் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு பெண் டாக்ஸி ஓட்டும் இந்தக் கதை புதுமையானது இல்லைதான். ஆனால் அப்படி டாக்ஸி ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் அவர் சந்தித்தது என்ன, சாதித்தது என்ன என்பதைப் புதுமையாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின். பக்கவாதம் வந்த அம்மாவுடன் வாழும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் இறந்து போன அப்பா செய்த வேலையான டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார். இன்னொரு பக்கம் மூவர் கொண்ட ஒரு கூலிப்படை பலரைக் கொன்று […]
Read Moreஅ.தி.மு.கவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.கவை தலைமை தாங்க இருப்பதாகவும் சசிகலா தெரிவித்து வருகிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சசிகலாவும் தனது லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் நான்தான். கட்சிக்கு தலைமை தாங்குவதும் நான்தான் என்று செயல்பட்டு வருகிறார். இதனால் அ.தி.மு.க.வில் நீடிக்கும் குழப்பம் முடிவுக்கு வராமலேயே உள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த சசிகலா, […]
Read Moreதியேட்டர்களில் எந்தப் படமும் வெளியாகலாம். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு என்று படங்களுக்கு சில தகுதிகள் உண்டு. அந்த தகுதியை சரியாகப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. குடும்பத்துடன் அமர்ந்து சிரித்து மகிழ்ந்து பார்க்க வேண்டிய படமாக அமைந்திருக்கும் உடன்பால், வாழ்க்கையின் நிலையாமையையும், தேவைகளைக் கொண்ட மனித மனங்களின் உக்கிரங்களையும் எள்ளி நகையாடி சாடுகிறது. நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருக்கும் சார்லி, எந்த விதமான குணசித்திர வேடத்தையும் ஏற்று நடிக்க வல்லவர் என்பது தெரிந்த செய்திதான். ஆனால் […]
Read More