‘யாதோன் கி பாரத்’ படத்தில் ஆரம்பித்து ‘மூன்றாம் பிறை’யில் முடியும் கதை. சென்னையில் இருந்து ஸ்காட்லாந்து வரை நீளும் கதையில் இன்னும் கூட பல படங்களின் நினைவுகளை தாங்கிச் செல்கிறது திரைக்கதை. ஐந்து வயதிலிருந்து அவள் அறியாமல் காதலித்து வரும் காதலன், பருவ வயது வந்ததும் அவளுக்கு இன்னொருவன் மேல் காதல் ஈர்ப்பு ஏற்பட, அப்போதும் அவளை பின்தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறான். ஸ்காட்லாந்து போய் அவள் காதலிக்கும் காதலன் அவளைக் கழற்றிவிட, ஒரு விபத்தில் அவளுக்கு தற்போதைய […]
Read Moreபெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் ஆண்களின் பார்வையில் எல்லாக் காலத்திலும் பெண்ணின் கற்பு மட்டுமே பேசு பொருள் ஆகிறது. அது மனைவியாக இருந்தாலும் சரி… சகோதரியாக இருந்தாலும் சரி… அவற்றை எல்லாம் தாண்டி இந்தப் படத்தில் தாயின் ஒழுக்கம் குறித்து மனம் வெறுக்கும் மகன் பற்றிய கதை சொல்லப்படுகிறது. அந்தத் தாய் செந்தி. மகன் நாயகன் வசீகரன். தாயை மகன் வெறுக்கும் காரணம் மேலே சொன்ன ஒழுக்க சந்தேகம்தான். ஆனால், பெற்ற மனம் பித்து என்ற கதையாக […]
Read Moreவித்தியாசமான ஒரு அமானுஷ்யக் கதை. இதுவரை நாம் பார்த்திருக்கும் அமானுஷ்ய படங்களில் எல்லாம் ஒரு கட்டடத்திற்குள் ஒரு ஆத்மா புகுந்துவிட்டு அனைவரையும் ஆட்டிவைக்கும். கடைசியில் அந்த ஆத்மாவின் பழிவாங்கல் முடிந்தவுடன் அங்கிருந்து அகன்று விடும். இந்தப் படத்தில் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி தன் காதல் கணவன் சபரியுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார். அங்கே இன்னொரு பிளாட்டில் வசிக்கும் ஸ்வேதா அவருக்கு முதல் தோழியாக அறிமுகமாகிறார். ஆனால், ஒரு பக்கம் சபரி ரக்ஷிதாவை இயற்கையாக இறந்தது போல […]
Read Moreமலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் சீரியல் கில்லர் வகை திரைப்படம். ஆனால் மற்ற சீரியல் கில்லர் கதைகளிலிருந்து இந்தப் படத்தில் கதைக்களம் முற்றிலும் மாறுபட்டது. படத்தின் கதை இதுதான். கதை நாயகி பாவனாவின் தம்பி அவர்களது பெற்றோர் விபத்தில் இறந்ததிலிருந்து சற்றே மனநிலை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவராய் இருக்கிறார். இருந்தும் அவரது மனநல பாதிப்பு அவ்வப்போது ஏற்படுவதால் தொடர் சிகிச்சையில் இருக்க… ஒரு நாள் அவர் காணாமல் போகிறார். தடயவியல் துறையில் பணியாற்றும் பாவனா தம்பியை காணாததில் பரபரப்பு […]
Read Moreதலைப்பே நண்பர்களுக்கான ஒரு குறியீடுதான். அப்படியான நண்பர்களின் கதைதான் இது. அத்துடன் நம்ம சதீஷ் கதாநாயகனாக ஆனதால் இதைக் காமெடியான ட்ரீட்மெண்டுள்ள படம் என்றும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அப்படி ஐடி துறையில் வேலை பார்க்கும் சதீஷும், சுரேஷும் நண்பர்களாக இருக்கிறார்கள். சதீஷ் தன்னுடன் வேலை பார்க்கும் மோனிகா சின்னகோட்லாவைக் காதலித்து மனக்கவிருக்கிறார். அதற்கான பேச்சுலர் பார்ட்டியில் நடந்த மது விருந்தில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்த சதீஷ் அடுத்த கூத்தைக் கேள்விப்பட்டு காதலை பிரேக் […]
Read Moreமுக்கோணக்காதல் கதைகள் சினிமாவில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கணவனுடன் நிம்மதி தேடி வந்த இடத்தில் நாயகியின் முன்னாள் காதலனும் அங்கே வந்து சேர்ந்தால் என்ன ஆகும்..? இப்படியும் சில படங்கள் வந்திருந்தாலும் அதில் விட்டுக் கொடுத்தல் இருந்திருக்கிறது. ஆனால், அந்த இரு ஆண்களும் சுய நலத்துடன் செயல்பட ஆரம்பித்தால், இருவரின் இடையில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்ணின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக சொல்லியிருப்பது இந்தப் படத்தை வித்தியாசப் படுத்தியிருக்கிறது. அதிலும் கிளைமாக்சில் […]
Read More