August 2, 2026
  • August 2, 2026

Simple

தமிழரசன் திரைப்பட விமர்சனம்

by on April 26, 2023 0

மருத்துவத்தைக் கையில் வைத்துக் கொண்டு மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனையின் மெடிக்கல் மாஃபியாக்களை இன்னொரு முறை அடையாளம் காட்டி இருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன். அப்படி படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியின் மகன் பிரணவ்வுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேர அதற்காக முக்கால் கோடி சிகிச்சை கட்டணமாகவும், அதற்கு முன்பணமாக 25 லட்சம் செலுத்தினால்தான் அறுவை சிகிச்சைக்கான பட்டியலிலேயே இடம் பிடிக்க முடியும் எனவும் தனியார் மருத்துவமனை முரண்டு பிடிக்க, கொதித்து […]

Read More

டிரீம் வாரியர் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஃபர்ஹானா வெளியீடு எப்போது தெரியுமா..?

by on April 24, 2023 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு… ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான ‘ஃபர்ஹானா’ மே 12-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட சிறந்த படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது ட்ரீம் […]

Read More

சிவகார்த்திகேயனின் அயலான் தீபாவளிக்கு வெளியாகிறது

by on April 24, 2023 0

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரம்மாண்ட வெளியீடான ‘அயலான்’ இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இது குறித்து KJR ஸ்டுடியோஸ், கோட்டபாடி ஜே ராஜேஷ் பேசுகையில் “இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி. “அயலான்” திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், […]

Read More

யாத்திசை திரைப்பட விமர்சனம்

by on April 22, 2023 0

வெற்றி பெறுவது முக்கியம் அல்ல – வெல்ல முடியாது என்று தெரிந்தும் பெரும்பலம் கொண்ட எதிரியுடன் மோதுவதே வெற்றிதான். இந்த விஷயத்தைதான் ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாகச் சொல்லப்படும் சரித்திரப் புனைவின் வழியாக உணர்த்துகிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். ‘சோழர்கள் மீண்டும் வந்து விட்டார்கள்’ என்கிற பதாகையோடு உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் கல்கி எழுதி மணிரத்தினம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் அதிர்வலையை கிளப்பிக் கொண்டிருக்க, சந்தடி இல்லாமல் பாண்டிய பேரரசின் கதையை, தானே ஆய்வுகள் மேற்கொண்டு புனைவாக […]

Read More

தெய்வ மச்சான் திரைப்பட விமர்சனம்

by on April 21, 2023 0

படத்தின் தலைப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும் இது ஒரு காமெடி படம் என்று. ஆனால் வெறும் காமெடியோடு நிற்காமல் அதற்குள் ஒரு அழகான லைனை வைத்திருக்கிறார் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார். நாயகன் விமல். அவருக்கு அடிக்கடி வித்தியாசமான கனவு ஒன்று தோன்றுகிறது. அதில் வெள்ளைக் குதிரையில் வரும் ஒரு சாட்டைக்காரர் விமலின் வாழ்க்கையில் யார் யார் இறக்கப் போகிறார்கள் என்பதை சொல்லி விட்டுப் போகிறார். அவர் சொன்னது போலவே அடுத்த நாள் அவர்கள் இறந்து விடுகிறார்கள். […]

Read More

பெண்கள் சந்திக்கும் சவால்களைச் சொல்லும் சங்கர்ஷனா

by on April 20, 2023 0

மஹிந்திரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாச ராவ் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள படம் “சங்கர்ஷனா” இந்தப் படத்தில் சைதன்யா, நாயகனாக நடிக்க ரஷீதா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர். இசை – ஆதித்யா ஸ்ரீராம் கதை, திரைக்கதை, இயக்கம் – சின்னா வெங்கடேஷ். தயாரிப்பு – ஸ்ரீனிவாச ராவ்.   படம் பற்றி இயக்குனர் […]

Read More