August 2, 2026
  • August 2, 2026

Simple

ஜிவி பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் டியர் பட பணிகள் இறுதிக் கட்டத்தில்…

by on May 6, 2023 0

*ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.* *’இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.* ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய […]

Read More

குலசாமி திரைப்பட விமர்சனம்

by on May 6, 2023 0

பாலியல் குற்றவாளிகளுக்கு சினிமாக்காரர்கள் தரும் தண்டனை மரண தண்டனை மட்டுமே. இதனை இன்னொரு முறை உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ ஷரவணஷக்தி. ஆட்டோ ஓட்டுனராக வரும் நாயகன் விமலின் தங்கை கீர்த்தனா மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து, தான் பிறந்த கிராமத்திற்கு பெருமை சேர்க்கிறார். தொடர்ந்து அவரை மருத்துவராக விரும்பிய விமல் அதற்கு போதிய பணமின்றி தவிக்க அந்த கிராமத்து மக்களே சேர்ந்து விமலின் தங்கையை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். இத்தனைப் பாடுபட்டு தங்கையை மருத்துவராக […]

Read More

விரூபாக்ஷா திரைப்பட விமர்சனம்

by on May 5, 2023 0

தெலுங்கில் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த இந்தப் படம் அதே சூட்டோடு, அதே டைட்டிலுடன் தமிழுக்கு வந்திருக்கிறது. கானகம் சூழ்ந்த ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அந்த கிராமத்தில் தொடர்ந்து குழந்தைகள் இருந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்துக்கு புதிதாக வந்து குடியேறிய வெங்கடாசலபதி என்கிற நபர் செய்யும் மாந்திரீக வேலைகள்தான் இப்படி குழந்தைகள் இறப்பதற்கு காரணம் என்று புரிந்து கொள்ளும் ஊர் மக்கள் அவரையும் கை, கால் விளங்காத அவரது மனைவியையும் கட்டிப் போட்டு உயிரோடு எரித்து விடுகிறார்கள். இப்படியான […]

Read More

தீர்க்கதரிசி திரைப்பட விமர்சனம்

by on May 5, 2023 0

மலையாளத்தில் வருவது போல் சிறந்த கதை திரைக்கதையுடன் ஒரு படம் வராதா என்று ஏங்கிய தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக வந்திருக்கிறது இந்தப் படம். காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணி செய்கிறார் ஶ்ரீமன். அங்கு அடிக்கடி அனாமதேய போன் கால்கள் வந்து அவர்கள் வேலையை கெடுத்துக் கொண்டிருக்க, அது போன்றே ஒரு அழைப்பு வருகிறது.  அடையார் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்படுவார் என்று அந்த அழைப்பு சொல்ல போலீசும் அது அனாமதேய அழைப்பு என்று அசட்டையாக […]

Read More

மியூசிக் ஸ்கூலுக்காக இசைஞானியை இயக்குனருடன் சந்தித்த ஸ்ரேயா..!

by on May 4, 2023 0

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண்… இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர்.  யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் […]

Read More

இயக்குநர் நடிகர் மனோபாலா மறைவு – கடைசிப் பட படப்பிடிப்பு வீடியோ

by on May 3, 2023 0

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 3, 2023) பிற்பகல் 12.55 மணி அளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.  மனோபாலாவின் மனைவி பெயர் உஷா, மகன் பெயர் ஹரீஷ். அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை (மே 4) காலை 10:30 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும்.  350க்கு மேல் படங்களில் நடித்துள்ள மனோபாலா நடித்த கடைசிப் […]

Read More