காலம் காலமாக பள்ளி ஆண்டு விழாக்களில் இன்றைய சமூகத்தில் காலம் சென்ற பெருந்தலைவர்கள் நேரில் வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் நாடகம் போடுவார்கள். கிட்டத்தட்ட அதே கற்பனையில் காலம் சென்ற அறிவியல் அறிஞர் அப்துல் கலாமை நவீன பொழுதில் அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால் நமக்குத் தெரிந்த அப்துல் கலாமாக அல்ல ; பள்ளி இறுதி முடித்த பாலகனாக இதில் கலாம் வருகிறார். ராக்கெட் ஓட்டும் கற்பனையில் இருந்தாலும் சூழ்நிலை காரணமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிற […]
Read Moreஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் ஒவ்வொரு விதமானது. அதில் சிலரது வாழ்க்கைப் பயணம் வினோதங்கள் நிறைந்தது. அப்படி தியாகு என்ற மனிதனின் வாழ்க்கை வினோதங்களை நமக்குக் கடத்துகிறார் இயக்குனர் ஆர்.சிவா. சந்தோஷமான மலை கிராமத்து வாழ்க்கையில் சித்தப்பாக்களின் சூழ்ச்சியால் தன் பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து விடும் தியாகு சென்னையில் ஒரு மேன்ஷன் உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்படுகிறார். அங்கே இருக்கப் பிடிக்காமல் வாழ்வில் அமைதி தேடி காசிக்கு செல்கிறார். அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், வாழ்க்கையின் அனுபவங்களை […]
Read Moreநெல்சன் திலீப்குமாரை ஒரு முன்னணி இயக்குனராக மட்டும்தான் நமக்குத் தெரியும் அல்லவா..? ஆனால் அவர் இப்போது கவின் நடிக்க சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ‘பிளடி பெக்கர்’ (Bloody Begger) என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். Filament Pictures சார்பாக நெல்சன் திலிப் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஜென் மார்டின் இசையமைக்க, சுஜிதா சாரங் ஒளிப்பதிவு செய்யும் படத்தின் படத்தொகுப்பை ஆர்.நிர்மல் கவனிக்கிறார். எதிர்வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக […]
Read Moreசினிமாவுக்கு வாத்தியார் பெருமை சேர்த்தது ஒரு காலம். இது வாத்தியார்களைப் பெருமைப்படுத்தும் சினிமாப் படம். எல்லோருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்கிற அடிப்படையில் கிராமப்புறங்களில் பணி புரியும் வாத்தியார்களின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். அத்துடன் கல்வி போதித்து அறியாமையைப் போக்குவது என்பது ஒரு தலைமுறையில் சாத்தியப்படக்கக்கூடிய விஷயம் அல்ல என்பதையும் மூன்று தலைமுறைக் கதை களாகச் சொல்லி ஆழமாக உணர்த்தியும் இருக்கிறார். ஆண்டான்களின் அடிமைகளாக […]
Read Moreசினிமா வரலாற்றில் இயக்குனர் யார் என்பது தெரியாமலேயே வெளிவந்திருக்கும் படம் இது. அதற்குக் காரணம் அவர் பாதியிலேயே இந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம். அந்தக் கதை என்னவென்று நமக்குத் தெரியாது. எனவே, படத்தின் கதையைப் பார்க்கலாம். இதுவும் ஒரு காதல் கதைதான், ஆனால், வழக்கமான காதல் கதைகளில் இருந்து வித்தியாசப்பட்டது. காதலுக்கு வித்தியாசமான வில்லனாக இதில் காதலி பருவமடையாத விஷயத்தை வைத்திருக்கிறார் அந்தப் பெயர் தெரியாத இயக்குனர். அதாவது நாயகி மனிஷா ஜித் பருவமடையாமலேயே இருக்கிறார். அவர் […]
Read More60 வருடங்களுக்கு ஒரு முறை நிலவு பூமிக்கு அருகில் வருவதால் நிகழும் ‘சூப்பர் மூன்’ என்கிற இயற்கை அதிசயத்தையும், நவீன அறிவியலின் இயற்பியல் தத்துவங்களையும் வைத்து ஒரு சிக்கலான கதையை எழுதி, அதை சுலபமாகப் புரியவும், சுவாரசியமாகத் தரவும் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி. 1964 ஆம் வருடம் ஒரு சூப்பர் மூன் நிகழ்வு நடக்க, அப்போது விவேக் பிரசன்னாவைச சுற்றி ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இப்போது இந்த 2024 ஆம் வருடம் அதேபோன்ற ஒரு சூப்பர் […]
Read More