December 21, 2025
  • December 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லாக் டவுனில் வீட்டுக்குள் சிம்பு செய்யும் வேலையைப் பாருங்கள் வீடியோ
April 14, 2020

லாக் டவுனில் வீட்டுக்குள் சிம்பு செய்யும் வேலையைப் பாருங்கள் வீடியோ

By 0 942 Views

நேரத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு லாக் டவுன் பெரிய விஷயமேயில்லை. காரணம் எந்த நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வித்தை தெரிந்தவர்கள அவர்கள். 

ஆனால், என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தான் பொழுதை எப்படிப் போக்குவதென்று புரியாமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சினிமாக்காரர்களின் படும் பாடு ரொம்பவே அவஸ்தைதான்.

கொரோனா விழிப்புணர்வு ஊட்டுகிறோம் என்று ஆளாளுக்கு மருத்துவர்கள் போல் வந்து போடும் வீடியோ வர வர எரிச்சலைத் தந்து கொண்டிருக்கிறது. சிலர் டிக் டாக்கில் நடனம் ஆடுகிறார்கள். சேலஞ்ச் என்று எசகு பிசகாக ஏதோ செய்கிறார்கள்.

இதில் நல்லவராக மாறிவிட்ட சிம்பு வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா..? உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள சுற்றிச்சுற்றி ஓடுகிறார். அதை வீடியோ எடுத்தும் போடுகிறார்.

இதில் சொல்லப்படாத விஷயம், அவரின் பினால் ஓடி ஓடி வீடியோ எடுப்பவரும் அதே போல ஃபிட்டாக இருப்பார் என்பது நிச்சயம்.

சிம்பு ஓடும் வீடியோ பாருங்கள்…