October 15, 2025
  • October 15, 2025
Breaking News
August 8, 2019

மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டார்

By 0 922 Views
‘மாநாடு’ படம் அறிவிக்கப்பட்ட போதே அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் எச்சரித்தார்கள்- அது தவறான முடிவு என்று. ஆனால், சிம்பு மீது அவர் வைத்த அன்பினாலும், நம்பிக்கையாலும் அது கண்டிப்பாக நடைபெறும் என்ற உறுதியுடன் இருந்தார்.
 
ஆனால், காலமும், சிம்புவும் தன் கடமையைச் சரிவரச் செய்ய (!), இப்போது தன் தவற்றை உணர்ந்த சுரேஷ் காமாட்சி தன் மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். ஆனால், ‘மாநாடு’ படத்தை அவர் கைவிடவில்லை. அது விரைவில் புதிய பரிமாணத்தில் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்.
 
அவர் மீடியாக்களுக்கு அனுப்பிய பத்திரிகைச் செய்தி கீழே…
 
வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தார். 
 
தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
 
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. 
 
அதனால் சிம்பு “நடிக்க இருந்த ‘மாநாடு’ படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 
 
வெங்கட் பிரபு இயக்க ‘மாநாடு’ படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!
 
-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்