இயக்குநர் கோபி நயினாரின் திறமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடைய ஸ்கிரிப்டுகள் சினிமாவுலகில் பிரசித்தம். முன்பு ஒரு ‘பெரிய இயக்குநர்’, ‘பெரிய ஹீரோ’வை வைத்து இயக்கிய படத்தின் கதை தன்னுடையது என்று கோபி வழக்கே தொடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
ஆனால், அவரது கதையை வைத்துப் புகழ் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அந்தப் ‘பெரிய இயக்குநர்’ அப்போதைக்கு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், கோபி நயினாரின் திறமை கண்டு வியந்த நயன்தாரா அவரைத் தேர்வு செய்து நடித்துக் கொடுத்த ‘அறம்’ கண்டு இன்டஸ்ட்ரியே ஆடிப்போனது. கோபியின் திறமை கண்டு கோலிவுட்டே வாய்பிளந்தது. இது யாருடைய கண்ணை உறுத்தியதியதோ தெரியவில்லை.
அவர் திறமை ஸ்கிரிப்டில் ஒகே. ஆனால், அவருக்குப் படம் இயக்க வராது என்று பரவலாகப் பேச வைத்தார்கள். இந்த நிலையில் புதுமையான கருத்துகளை விரும்பும் சித்தார்த், தன் படத்தை இயக்க கோபிக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
ஸ்கிரிப்ட் வேலை போய்க்கொண்டிருக்க, திடீரென்று அந்த புராஜக்டிலிருந்து சித்தார்த் விலகிக் கொண்டார் என்கிறார்கள். கேட்டால்… தட் சேம் திங்… அவருக்குப் படம் இயக்க வராது என்பதால்தானாம். என்னய்யா கூத்து இது..?
இப்படியா அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் ‘கத்தி’யைச் சொருகி, அவரை ஓரம் கட்டுவீர்கள்..? பேட் திங்(க்) பாய்ஸ்..!