January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குறும்பட பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு – ஷார்ட் ஃப்ளிக்ஸ் செயலி
July 18, 2019

குறும்பட பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு – ஷார்ட் ஃப்ளிக்ஸ் செயலி

By 0 994 Views

‘நெட்ஃபிளிக்ஸ்’ (NetFlix) கேள்விப்பட்டிருப்பீர்கள்… அதைப்போலவே புதிதாக குறும்படங்களுக்கான ஒரு செயலி ‘ஷார்ட் ஃப்ளிக்ஸ்’ (ShortFlix) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Youtube-ல் சென்று குறும்படங்களைத் தேடி கண்டுபிடுத்து பார்ப்பதற்கு பதில் இந்த Shortflix செயலி மூலம் மிக எளிமையாக இருந்த இடத்திலிருந்தே தரமான குறும்படங்களை கைப்பேசி வாயிலாக கண்டு ரசிக்கலாம்.

குறும்பட இயக்குனர் அல்லது அந்தக் குழுவினர் அவர்களது படைப்புகளை Shortflix-ன் வலைதள முகவரியிலோ அல்லது நேரடியாகவோ சென்று சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட குறும்படங்கள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் அவை Shortflix செயலியில் பதிவேற்றப்படும்.

இதனுடன் Shortflix-ன் சொந்த தயாரிப்பில் உருவான குறும்படங்கள் Shortflix Originals என்ற பிரிவில் பதிவேற்றப்படும். அவற்றையும் அனைவரும் கண்டு ரசிக்கலாம். Shortflix செயலியில் பதிவேற்றப்பட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாக்கப்பட்ட குறும்படங்களிலிருந்து சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை Shortflix-ன் பிரிமியரில் பிரமாண்டமான வெள்ளித்திரையில் திரையிடப்படும்.

ShortFlix செயலியின் அறிமுக விழா மற்றும் முதல் பிரிமியர் கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி, 2019 அன்று சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் நடைபெற்றது. இதில் 5 சிறந்த தரமான குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் திரு. சிறுத்தை சிவா, இயக்குநர் திரு. S. சரவணன் மற்றும் மாயாஜால் திரையரங்கின் மேலாளர் திரு. மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ShortFlix

ShortFlix

Shortflix-ன் இரண்டாவது பிரிமியர் சமீபத்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதியன்று மாயாஜால் திரையரங்கில் நடந்தேறியது. இந்த முறையும் சிறந்த தரமான ஆறு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவினை சிறப்பிக்க தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் திரு.சிவா, இயக்குனர் திரு.அமீர், இயக்குனர் திரு.விஜய் மில்டன், நடிகர் திரு.மனோஜ் கே.பாரதி மற்றும் பத்திரிகை தொடர்பாளர் திரு.நிகில் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Shortflix செயலியை கீழ்கண்ட இணைப்பிற்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.shortflix

https://apps.apple.com/in/app/shortflix/id1448385291

உங்கள் குறும்படங்களை Shortflix செயலியில் பதிவேற்ற கீழ்கண்ட வலைதள முகவரியிலோ அல்லது கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

https://shortflix.co.in

தொடர்புக்கு
vvshortflix@gmail.com
info@shortflix.co.in
+91-9962052288