July 9, 2025
  • July 9, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் இங்கிலாந்தில் தயாராகிறது
July 19, 2019

தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் இங்கிலாந்தில் தயாராகிறது

By 0 711 Views

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ‘ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ தனது 18வது படைப்பாக தயாரிக்கிறது.

ஒரு ‘கேங்ஸ்டர் திரில்லர்’ வகையைச் சார்ந்த இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, இப்படம் முழுவதுமே இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கார்த்திக் சுப்பாராஜ் எழுதி இயக்கும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ் சஷிகாந்த் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக சக்கரவர்த்தி ராமசந்திரா இணைகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள, அன்பறிவ் சண்டைக் காட்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார்.

ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.