August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சூர்யாவின் டிவீட்டால் கோலிவுட்டில் அதிர்ச்சி அலை
February 7, 2021

சூர்யாவின் டிவீட்டால் கோலிவுட்டில் அதிர்ச்சி அலை

By 0 778 Views

கொஞ்ச நாள் முன்பு நடிகர் சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் வெகு விரைவிலேயே அந்த செய்தி நம்பகத்தன்மை அற்றது என்பது உறுதியானது.

ஆனால், சற்று நேரத்துக்கு முன்பு அவரது மகனும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் டிவீட் கோலிவுட்டில் மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் இடத்திலும் மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த ட்விட்டில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து குணம் அடைந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஒரு முன்னணி ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. தியேட்டர்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி அறிவித்திருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற செய்திகளை பொதுமக்கள் அளவிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக பள்ளி கல்லூரிகளிலும் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வரும் வேளையில் இன்னும் கொரோனா வின் பாதிப்பு முழுமையாக அகலாமல் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

சூர்யா சற்று முன் வெளியிட்ட ட்விட் கீழே…