December 28, 2025
  • December 28, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கொரோனாவுக்கு மத்தியிலும் திருமணம் செய்த செல்வராகவன் உதவி இயக்குநர்
April 27, 2020

கொரோனாவுக்கு மத்தியிலும் திருமணம் செய்த செல்வராகவன் உதவி இயக்குநர்

இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜாவின் திருமணம் இன்று நடைபெற்றது.

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த “NGK” படம் உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் சுஜாவின் திருமணம் இன்று  (27-04-2019, திங்கள் கிழமை) காலை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இனிதே நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் அரவிந்த் குமார் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக (காலை 07.10க்கு AM) மணமகன்,  மணமகள் சுஜா கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

செல்வராகவன் வீடியோ காலில் வாழ்த்து சொல்லி இருப்பாரோ?

நாமும் வாழ்த்துவோம்..!