November 25, 2024
  • November 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சீதக்காதியாக முதலில் விஜய் சேதுபதியை நினைத்துப் பார்க்கவில்லை – பாலாஜி தரணீதரன்
December 13, 2018

சீதக்காதியாக முதலில் விஜய் சேதுபதியை நினைத்துப் பார்க்கவில்லை – பாலாஜி தரணீதரன்

By 0 873 Views
balaji tharaneedharan

balaji tharaneedharan

விஜய் சேதுபதியின் 25வது படமாக வருகிறது ‘பேஸ்ஸன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் ‘சீதக்காதி’. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. 

 
‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்தப் படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐஓபி ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் மோகன், லோகி உதயகுமார், முத்துக்குமார், விடியல் விநாயகம், அப்துல், ஆதிராசன், ராகவன், கோபாலகிருஷ்ணன், சுஹாசினி சஞ்சீவ், ஜெகஜீவன் என 17 மேடை நாடக கலைஞர்கள் பெருமைப்படுத்தப்பட்டனர்.
 
“சீதக்காதி படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னுடைய குருநாதர் பாலாஜி அண்ணாவின் படம். இந்த படம் வாழ்க்கையை பற்றியும், கலையை பற்றியும் பேசும். மனதை வருடும் ஒரு அனுபவமாக இருக்கும், படத்தை திரையரங்கில் பார்க்கும்போது இதை உணர்வீர்கள்..!” என்றார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.
 
“என்னை நடிக்க வைத்தது, சினிமாவுக்குள் நடிகனாக கூட்டி வந்தது பாலாஜி தான். நாடக கலைஞர்களுடன் இணைந்து நடிக்கும்போது பயமாக இருந்தது. பாலாஜி தான் என்னை ஊக்கப்படுத்தினார். விஜய் சேதுபதியின் 25வது படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்..!” என்றார் நடிகர் ராஜ்குமார்.
 
“பொதுவாக எந்த ஒரு ஹீரோவும் தங்களது லேண்ட்மார்க் படத்தை ஒரு  பெரிய பேனரில், மிகப்பெரிய படமாக தான் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள், ஆனால் விஜய் சேதுபதி 25வது படத்தை எங்கள் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார். அவரின் 50, 75 மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க வேண்டும் என விரும்புகிறோம்..!” என்றார் தயாரிப்பாளர் ஜெயராம்.
 
“இந்த படத்தை உருவாக்கும்போது நான்  மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்தப் படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம்.
 
விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை. கடைசியில் அவரிடம் தான் போய் நின்றேன், அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார். சீதக்காதி தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன். மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம்..!” என்றார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.
 
என் 25வது படமாக எதை பண்ணலாம் என எந்த ஒரு சிந்தனையும் எனக்குள் இல்லை. அந்த நேரத்தில் தான் இந்த படம் எனக்கு அமைந்தது. இந்த கதையை நம்பிய தயாரிப்பாளர்களான மும்மூர்த்திகள் சுதன், உமேஷ், ஜெயராம் ஆகியோருக்கு நன்றி. இந்த கதை அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும். 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எல்லா படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் விஜய் சேதுபதி.
 
இந்த சந்திப்பில் நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடிகர் வெற்றி மணி, தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், உமேஷ், நிர்வாக தயாரிப்பாளர் ஏ குமார், சிங்க் சவுண்ட் ராகவ் ரமேஷ், ஆடை வடிவமைப்பு பிரியங்கா, ஒலிப்பதிவாளர் சுரேன், பப்ளிசிட்டி டிசைன் கோபி பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.