July 1, 2025
  • July 1, 2025
Breaking News
January 30, 2021

சசிகலா நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் – பிப் முதல்வாரம் சென்னை வருகை

By 0 557 Views
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
 
இந்நிலையில் தண்டனைக்காலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பே உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா தொற்றும் அறியப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
 
அதனால் விடுதலை தொடர்பான கோப்புகள் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சசிகலாவிடம் கையெழுத்து பெறப்பட்டது.
 
ஆனாலும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் சசிகலா சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. 
 
கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
 
எனவே, மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் ஆகும் சசிகலா பெங்களூருவில் பண்ணை வீடு ஒன்றில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.
 
பிப்ரவரி 3 அல்லது 5-ந் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.