June 23, 2026
  • June 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சந்தானம் மகன் பிரபுதேவா படத்தில் அறிமுகம் ஆகிறார்
December 18, 2020

சந்தானம் மகன் பிரபுதேவா படத்தில் அறிமுகம் ஆகிறார்

By 0 587 Views

கடந்த 2014 ஆம் வருஷம் இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ‘மஞ்சப்பை’ படம் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. அடுத்து, ஆர்யாவை வைத்து கடம்பன் படத்தை இயக்கியிருந்தார் ராகவன்.

தற்போது, தனது மூன்றாவது படமாக பிரபுதேவாவை வைத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தில், சந்தானத்தின் மகன் நிபுன் அறிமுகமாகிறாராம்.

தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘பஹிரா’ படத்தில் நடித்துவரும் பிரபுதேவா அடுத்ததாக ராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நிபுனைச் சுற்றித்தான் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்பது தெரிந்த விஷயம்தானே..? அந்த வரிசையில் டிக்கிலோனா படம் அவரது நடிப்பில் அடுத்தது விரைவில் வெளிவர இருக்கிறது.