October 17, 2025
  • October 17, 2025
Breaking News
November 17, 2019

சந்தானம் ஆர்.கண்ணன் பட தலைப்பில் ஒரு ஸ்பெஷல்

By 0 1005 Views
இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா ஃபிக்ஸ் உடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கண்ணனே இயக்கும் இப்படத்தில் சந்தானம் நடித்து வந்தார்.
 
கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. விரைவில் பெயர் சூட்டப்படவிருக்கும் இதன் டைட்டில் லுக் முதலில் வெளிவரவிருக்கிறது. “இந்த டைட்டிலில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது..!” என்று மட்டும் சொன்னார் ஆர்.கண்ணன்.
 
முழுக்க முழுக்க நகைச்சுவையில் மீண்டும் கலக்கியிருக்கிறார் சந்தானம். நகைச்சுவை, காதல், ஆக்ஷன் என முழு மசாலாவாக படம் தயாராகி வருகிறது. குடும்பங்கள் ரசிக்கும் வகையில் அமைந்த இப்படத்தில் தாரா அலிஷா பெர்ரி நாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சுவாதி முப்பாலா நடிக்க, ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
 
படத்தில் 30 நிமிட காட்சி 80களில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. இதற்காக ஐதராபாத்தில் 80 லட்சம் ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டது. 15 நாட்கள் படப்பிடிப்பு இதில் நடைபெற்றது. இத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்தது.
 
ஐந்து பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்கப்படவுள்ளது. சந்தானம் – தாரா அலிஷா பெர்ரி பங்குபெறும் இப்பாடல் காட்சிக்கான விவாதம் நடைபெற்றுகிவருகிறது. 2020 பிப்ரவரி மாதம் வெளியாவதற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.