April 20, 2025
  • April 20, 2025
Breaking News
March 15, 2019

தமிழரசன் படத்தில் பரபரப்பான என் வேடம் – சங்கீதா

By 0 943 Views

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம்  ‘தமிழரசன்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

இவர்களுடன் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின்,  முனீஸ்காந்த் உள்ளிட்டோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

இந்தப்பட்டியலில் மிக முக்கிய வேடத்தில் சங்கீதா இணைகிறார்… சில ஆண்டுகளுக்கு முன் நெகடிவ் வேடங்களில் இரண்டாவது சுற்று வந்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

ஏன்..? – சங்கீதாவிடம் கேட்டபோது…

“எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன். இந்தப் படத்தில் என் கேரக்டர் பரபரப்பாக பேசப் படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டரான இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லாக இருக்கிறது..!” என்றார்..

இளையராஜா இசையமைக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர். பாடல்களை  பழனிபாரதி, ஜெய்ராம் எழுத புவன்சந்திரசேகர் படத்தொகுப்பு செய்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பாபு யோகேஸ்வரன்.

‘தமிழரசன்’ படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது..!