பாரதப் பிரதமர் இந்திய மக்களிடையே நமது ஒற்றுமையை காட்டும் வகையில் நேற்று (9 ஆம் தேதி) வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிரச் செய்யும் படி வேண்டுகோள் விடுத்தார்.
இதை அடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா நேற்று அதே 9 மணிக்கு ஒரு வீடியோவை ஷேர் செய்தார். அதில் அவர் இருட்டில் தன் முகம் தெரியுமபடி லைட்டரை க்ளிக் செய்து சிகரெட் ஒன்றை பற்ற வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையாகி வருகிறது.
சில நாள் முன்பு தனக்கு கொரோனா நோய் இருப்பதாக கூறி பின்பு, ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் அன்று அனைவரையும் ஏமாற்ற தான் அப்படி கூறினேன் என்றும் சொல்லியிருந்தார். இந்நிலையில் மீண்டும் இந்த வீடியோ ஹாட் ஆகி விட்டது.
ஒரு விஷய்ம் பிடித்தால் செய்யலாம். பிடிக்காவிட்டால் அமைதியாக இருந்து விடலாம். இந்த ஜனநாயக நாட்டில் அதை எதிர்க்கக் கூட உரிமை இருக்கிறது. ஆனால், இப்படி ஒரு செயலைக் கொச்சைப்படுத்தி குசும்பு காட்டவேண்டுமா ஆர்ஜேவி..?