சினிமாவில் என்ன நடக்கிறதோ அதற்கு எதிராகத்தான் வெளியே விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
சினிமாவில் வில்லனாகத் தோன்றும் ஒருவர் வெளியே அத்தனை சாதுவாகவும், நல்லவராகாவும், பக்திமானாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
அதேபோல் சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் அவ்வாறு இருப்பதில்லை. அதையும் பார்க்கிறோம்.
இந்த வருடம் இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘சஞ்சய் லீலா பன்சாலி’யின் ‘பத்மாவதி’ படத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. படத்துக்குள் ‘பத்மாவதி’யாக வந்த ‘தீபிகா படுகோனே’ படத்தில் ‘ரத்தன் சிங்’காக வந்த ‘ஷாகித் கபூரை’ மணப்பார்.
அதே சமயம் தன்னை அடையத் துடிக்கும் முகலாய மன்னன் ‘அலாவுதீன் கில்ஜி’ (படத்தில் நடித்தவர் ரன்வீர் சிங்), தன்னை எந்த விதத்திலும் தீண்டிவிடக் கூடாதென தன் முகத்தைக் கூடக் காட்டாமல் அக்கினியில் வெந்து உயிரை விடுவார். இது படம் சொன்ன கதை.
ஆனால், வெளியே நடந்த உண்மை ‘பத்மாவதி’யாக நடித்த ‘தீபிகா படுகோனே’வும், ‘அலாவுதீன் கில்ஜி’யாக நடித்த ‘ரன்வீர் சிங்’கும் காதலித்து இப்போது திருமணம் செய்துகொள்வது வரை வந்து விட்டார்கள்.
நவம்பர் 14 மற்றும் 15ல் அவர்களது திருமணமாம்..!
வாழ்த்த ‘ரத்தன் சிங்’ (ஷாகித் கபூர்) வருவாரில்லையா..?