பல வருடங்களாக மீடியாக்களும் ரஜினி ரசிகர்களும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கேள்வி ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பது தான்.
தன் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் அரசியல் பற்றிய பேச்சை ரஜினி ஆரம்பிப்பார். பின்னர் படம் வெளியானதும் அரசியல் பேச்சை தவிர்த்து விடுவார். இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் இப்போது கொரோனா பீதியில் அரசியல் கட்சி தொடங்காமல் தன் உடல்நிலை பற்றிப் பேசி வந்தார் ரஜினி.
இந்நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி தன் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினி தான் எந்த முடிவெடுத்தாலும் அவர்கள் ஒத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்து விரைவில் கட்சி தொடங்குவேனா, மாட்டேனா என்பதை அறிவிப்பேன் என்றார்.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஊடகங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறியிருக்கிறார். அதன்படி ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அவரது கட்சி செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் அறிவித்த ரஜினி அதனை தொடர்ந்து மீடியாக்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினி கொரோனா காலகட்டத்தில் அந்நோய் பாதிக்காமல் இருக்க உடலில் அதற்காக அதிக எதிர்ப்பு சக்தி தேவை பட்டதாகவும் அதனாலேயே கட்சி தொடங்கும் ஆலோசனையை தள்ளி வைத்ததாகவும் கூறினார்.
பின்னர் ஆலோசனை செய்து பார்த்ததில் ஒரு முறை உயிர் பிழைத்து எழுந்து வந்ததே தமிழ்மக்களின் பிரார்த்தனையால்தான் என்று இருக்க அவர்களுக்காக தன் உயிர் போனாலும் பரவாயில்லை, கட்சி ஆரம்பித்து அவர்களுக்கான மாற்றத்தை தர முடியும் என்று நம்புவதாக அறிவித்தார்.
தான் அரசியலில் வெற்றி பெற்றால் அது தமிழ் மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தால் அது தமிழ் மக்களின் தோல்வி என்றார்.
தமிழ்நாட்டுக்கு கண்டிப்பாக ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படும் நேரம் இது. அதனால் வருவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம். இப்போது இல்லை நான் எப்போதும் இல்லை..! என்று அவர் எழுச்சியுடன் பேசினார்.
அப்போது அவருடன் அர்ஜுன் மூர்த்தியும் தமிழருவி மணியனும் இருந்தார்கள்.