July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஆர் கண்ணன் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன்
March 23, 2021

ஆர் கண்ணன் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன்

By 0 691 Views

மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5′ தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது.

R.Kannan

R.Kannan

மலையாள சினிமாவில் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட” தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார்.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை.

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பெரிய பாராட்டுக்கள் குவியும் பாத்திரமாக இது அமையும்.

இதன் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் ஆரம்பமாகியது. முதல் நாள் படபிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். காரைக்குடியிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெறும். இவரது ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். 

‘மாஸ்கோவின் காவேரி ‘ படம் மூலம் சமந்தாவுடன் அறிமுகமான இவர் பின்பு ‘ வணக்கம் சென்னை ‘, யூ- டர்ன் ‘ மற்றும் பல படங்களில் நடித்தார். அதே வேளையில் ‘அந்தாள ராட்சசி’ படம் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாகி பிரபலமானார் . தெலுங்கில் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் – தெலுங்கு மொழிகளில் நடிக்கும் இவர் இன்று முதல் படபிடிப்பில் கலந்து கொள்கிறார்.