July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 49 வயதில் திடீர் திருமணம் செய்த முன்னணி தயாரிப்பாளர்
May 11, 2020

49 வயதில் திடீர் திருமணம் செய்த முன்னணி தயாரிப்பாளர்

By 0 622 Views

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் தமிழின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், அட்லி படங்களை தெலுங்கில் டப் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் தில்ராஜூவுக்கும், தேஜஸ்வினி என்பவருக்கும் நேற்றிரவு நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள, நரசிங்கம்பள்ளியில் இருக்கும் வெங்கடேஷ்வரா கோயிலில் திருமணம் நடந்தது.

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா..? ஆச்சரியம் இருக்கத்தான் செய்கிறது.

49 வயதாகும் தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017ம் ஆண்டு இயற்கை எய்தினார். பிறகு, திருமணம் குறித்த எண்ணமில்லாமல் இருந்த அவர் திடீரென ஊரடங்கு இருக்கும் நேரத்தில் மிகவும் எளிமையாக தன் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டது தான் அந்த ஆச்சரியம்.

டில் ராஜுவின் புதிய திருமண புகைபடங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.