September 20, 2026
  • September 20, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோத அடுத்த அணியின் அலுவலகம் திறப்பு
March 19, 2020

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோத அடுத்த அணியின் அலுவலகம் திறப்பு

By 0 675 Views

உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின் படி 2020 மே மாதத்துக்குள் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்த வேண்டிய சூழலில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட அணி இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களுடன் போட்டியிடும் அணியாக இராம நாராயணன் முரளி என்கிற என்.ராமசாமியின் தலைமையில் உருவாகியிருக்கும் அணியின் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. 

அந்த அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் அப்போது அறிமுகப்படுத்தப் பட்டனர்…

தலைவர் பதவிக்கு …
இராம நாராயணன் முரளி
என்கிற
N.ராமசாமி 
 
உப தலைவர் பதவிக்கு …
சுபாஷ் சந்திரபோஸ்
மைக்கேல் ராயப்பன்
 
செயலாளர் பதவிக்கு …
ராதாகிருஷ்ணன்
K J R 
 
பொருளாளர் பதவிக்கு… 
சந்திர பிரகாஷ் ஜெயின்
 
மற்றும் 21 செயற்குழு
உறுப்பினர்கள் 
 
S.V.சேகர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 
அறிவிக்கப்பட்ட இந்த இரு அணிகள் தவிர மேலும் இரு அணிகள் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.