September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • திரௌபதி இயக்குநர் மோகன் ஜி மீது நாளை போலீஸில் புகார்
March 13, 2020

திரௌபதி இயக்குநர் மோகன் ஜி மீது நாளை போலீஸில் புகார்

By 0 678 Views

நாளை காலை 11. 00 மணிக்கு பத்திரிக்கையாளர் விக்ரமன் “திரௌபதி” இயக்குநர் மோகன் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளார்.

சமீபத்தில் வெளியாகிய திரெளபதி திரைப்படம் பற்றி அதன் இயக்குநர் மோகனிடம் கலாட்டா மீடியா சார்பாக நெறியாளர் விக்ரமன் என்பவர் பேட்டி எடுத்தபோது கேள்விகளை உள்வாங்காமலும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத காரணத்தாலும் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே எழுந்து சென்றவர் அடுத்த நாள் சில நபர்களுடன் கலாட்டா மீடியா அலுவலகம் சென்று அங்கிருந்தவர்களை மிகவும் தரக்குறைவாக பேசியும் குறிப்பாக விக்ரமனின் ஜாதி என்ன என்று கேட்டும், விக்ரமனை ஜாதிய ரீதியில் திட்டியும் உள்ளாராம்.

அதனை அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டும் உள்ளார். அதே போல் விக்ரமனின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இவன் தான் நாடக காதலன் என்றும் இன்னும் பல தவறான செய்திகளை பரப்பி வருகிறாராம்.

அதனைத்தொடர்ந்து கலாட்டா மீடியா நிர்வாகத்தின் வேண்டுகோளினை ஏற்று விக்ரமனும் லைவ்வில் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கமாக கொடுத்த பின்பும் தொடர்சாயான தொலைப்பேசி அழைப்பின் மூலம் கொலை மிரட்டல் விடுத்தும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வந்துக்கொண்டு இருக்கிறாராம்.

இத்னால் கடுமையானமன உளைச்சலுக்கு ஆளான விக்ரமன் தனிப்பட்ட முறையில் நாளை காலை 11.00 மணிக்கு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளார்.