January 24, 2026
  • January 24, 2026
Breaking News
May 27, 2020

ரஜினியை தொடர்ந்து டிஸ்கவரி சேனலில் குரல் பதிக்கும் பிரகாஷ்ராஜ்

By 0 666 Views

டிஸ்கவரி சேனல் தொலைக்காட்சி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘இன் டூ த வைல்ட் ‘ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.   

அதுதான் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட ஒரு  ரியாலிட்டி நிகழ்ச்சி. அந்த எபிசோடும் பரவலான வரவேற்பைப் பெற்றது.

தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் அதே டிஸ்கவரியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.

இது குறித்து அவர்’ இது ஓர் அர்த்தமுள்ள பயணம். இயற்கையின் குரலாக நான் மாறப்போகிறேன். இதுவரை இல்லாத அளவிற்கு மிகுந்த சிரமப்பட்டு இயற்கை வன ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதற்கு நான் குரல் கொடுத்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் தமிழ் மற்றும் தெலுங்கில் குரல் கொடுத்திருப்பது புதிய அனுபவம் என்றும் பகிர்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

வைல்ட் கர்நாடகா எனும் இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அது கீழே…