கொரோனா பீதியால் ஊரடங்கு அமலில் இருக்க தொலைக்காட்சிகள் பலவும் மறு ஒளி பரப்பு எபிசோட்டுகளை போட்டு விடுகின்றன.
அதே சமயம், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதனை நெட்ஃபிளிக்ஸ் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் இந்த ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் தொடர்கள் குறித்து முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ‘”இந்த ஸ்ட்ரீமிங் தளங்களின் கையில் எடுத்த சமாச்சாரங்கள் சில நாட்களில் சலிப்பூட்டுகின்றன.
எல்லா தொடர்களும் ஒரே இருண்ட கதைகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைப் பார்த்த பிறகு அவர்கள் பின்பற்றும் முறை பழையதாகவும், கணித்துவிடக் கூடியதாகவும் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை. கலை என்பது இப்போது ஒரு வியாபாரச் சரக்காகி விட்டது…” என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.
அப்படி எல்லாம் சொல்லாதீங்க சார்… நாளைக்கு நீங்களே அங்க போக வேண்டியிருக்கும்..!