July 30, 2026
  • July 30, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அருண் பிரசாத் விபத்தில் பலி
May 15, 2020

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அருண் பிரசாத் விபத்தில் பலி

By 0 788 Views

சமீபத்தில்தான் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து அவரது உதவி இயக்குநர் கிருஷ்ணா  உள்பட மூவர் பலியானார்கள்.

இப்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் சாலை விபததில் இறந்த தகவல் கிடைத்திருக்கிறது.

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்    அன்னூரை சார்ந்த அருண் பிரசாத். இவர் மேட்டுப்பாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது நடந்த சாலை விபத்தில் பலியானார்.

 ஷங்கரிடம் சினிமா கற்ற இவர் அவரிடம் இருந்து வெளியேறி 4ஜி என்ற படத்தை வெங்கட் பக்கர் என்ற புனைபெயரில் இயக்கி வருகிறார். இருந்தாலும் ஷங்கரின் உதவி இயக்குனராகவே இவர் அறியப்படுகிறார்.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்..!