April 22, 2024
  • April 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பொன்மகள் வந்தாள் உள்பட ஏழு இந்தியப் படங்களை வெளியிடும் அமேசான் பிரைம்
May 15, 2020

பொன்மகள் வந்தாள் உள்பட ஏழு இந்தியப் படங்களை வெளியிடும் அமேசான் பிரைம்

By 0 714 Views

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். 

இணையவாசிகள், இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே.ஜே ஃபெரெட்ரிக். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், கலை இயக்கம் அமரன்.

படத்தின் இணைத் தயாரிப்பாளரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் CEO-வும் ஆன ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் கூறியதாவது..

” ‘பொன்மகள் வந்தாள்’ பட வெளியீட்டிற்காக ‘அமேசான் ப்ரைம் வீடியோ’வுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்”.

“ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்து படம் பற்றிய மேற்கொண்ட விவரங்கள் பற்றி அறிய மக்கள் எங்களிடம் கோரிக்கைகள் வைத்துக் கொண்டே இருந்தார்கள். படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடப்படுவதால், பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப எங்கும், எப்போது வேண்டுமானாலும் படத்தையும் படத்தில் அற்புதமாக அமைந்துள்ள நீதிமன்ற காட்சிகளையும் பார்த்து மகிழலாம்” என்கிறார் படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பிரேட்ரிக்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் பொன்மகள் வந்தாள் படம் உட்பட வெவ்வேறு மொழிகளில் ஏழு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புள்ள ஏழு இந்தியத் திரைப்படங்களை அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக உலகளாவிய அளவில் ப்ரீமியர் செய்யவுள்ளது.

” அமிதாப் பச்சன் ( Black, Piku ) மற்றும் ஆயுஷ்மான் குரானா ( Shubh Mangal Zyaada Saavdhan, Andhadhun ) நடித்துள்ள ஷுஜித் சிர்காரின் (Shoojit Sircar ) “குலாபோ சிதாபோ” (Gulabo Sitabo ) வித்யாபாலன் ( Dirty Picture, Kahaani ) நடித்துள்ள “சகுந்தலா தேவி” (Shakuntala Devi), ரா.மாதவன் ,அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம், ஜோதிகா நடித்துள்ள “பொன்மகள் வந்தாள்” மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பென்குயின்” ( தமிழ் மற்றும் தெலுங்கு ) உட்பட ஏழு இந்திய மொழித்திரைப்படங்கள் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் வரிசையாக அமேசான் பிரைமில் வெளியிடப்பட இருக்கிறது.

மொபைல் சாதனங்கள் ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக் ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடோஃபோன், BSNL, போன்றவற்றின் ப்ரைம் வீடியோ ஆப்-ல் பிரைம் உறுப்பினர்களால் இந்த வெளியீடுகளை எந்த நேரத்திலும் மற்றும் எந்த இடத்திலும் பார்வையிட முடியும். 

மேலும் ப்ரைம் வீடியோ ஆப்பில் பிரைம் உறுப்பினர்களால் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் அனைத்து அத்தியாயங்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மற்றும் எந்தவொரு இடத்திலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்வையிட முடியும்.
ப்ரைம் வீடியோ தற்போது இந்தியாவில் ப்ரைம் உறுப்பினர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி ஆண்டிற்கு வெறும் ரூ.999 அல்லது பிரதிமாதம் ரூ.129 என்னும் கட்டணத்தில் கிடைக்கப் பெறும். புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிந்துகொள்ள வருகை தரவும். www.amazon.in/prime மற்றும் 30-நாட்கள் டிரையலுக்கு சப்ஸ்கிரப் செய்யவும்

அமேசான் பிரைம் வீடியோ குறித்து:

பல்வேறு விருதுகளை வென்ற, அமேசான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும் ப்ரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை ப்ரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய பார்க்கவும் PrimeVideo.com

ப்ரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: இந்த புதிய வெளியீடுகள் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான Tam Clancy’s Jack Ryan, The Boys, Hunters Fleabag, மற்றும் The Marvelous Mrs.Maisel உள்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர் தன்மையின் ஒரு பகுதியாக கிடைக்கப் பெறுகிறது. ப்ரைம் வீடியோவில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, மற்றும் பெங்காலி ஆகியவைகள் உள்பட பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

உடனடி அணுகுவசதி: ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் ப்ரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் ப்ரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்குக் கிடைக்கப்பெறுகிறது. ப்ரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள ப்ரைம் வீடியோ ஆப்பில், ப்ரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றிப் பார்த்து மகிழலாம்.

மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDB-இன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாகப் பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லெட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.

ப்ரைம் உடன் உட்பட்டுள்ளது: ப்ரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு வெறும் ரூ.999 அல்லது மாதம் ரூ.129 கட்டணத்தில் கிடைக்கப் பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30 நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.