October 26, 2026
  • October 26, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 18, 2025

தமிழ்நாடு தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ்..!

0 296 Views

பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் அதன் பிஸ்கட்களை அழகாக பல்வேறு வடிவங்களில் உடைத்து தமிழ்நாடு தினத்தை கொண்டாடவுள்ளது.! சேலம்: தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடும் விதமாக மக்களின் அபிமான பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ‘எ பைட் ஆஃப் TN’ என்கிற முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது. இன்றளவில் பிராந்திய அளவில் மக்களுக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்ட பிரிட்டானியாவின் முன்முயற்சியாக இது இருக்கும். டேலன்ட்டட் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த பிரச்சாரம் பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் இருந்துவரும் ஒரு தனித்துவமான கலாச்சார […]

Read More
July 18, 2025

சட்டமும் நீதியும் (Zee 5 ஒரிஜினல்) சீரிஸ் விமர்சனம்

0 319 Views

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்கிறோம். ஆனால் அதில் பெறப்படும் நீதி அப்படி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா என்பதுதான் இந்தக் கதையின் வாயிலாக இதன் எழுத்தாளர் சூரியபிரதாப் சமுதாயத்தின் முன் வைக்கும் கேள்வி. தலைப்பைப் போலவே இதன் முழுக் கதையும் நீதிமன்றத்தையும் ஒரு வழக்கையும் சுற்றியே வருகிறது. நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு ஓரமாக மேசை நாற்காலியைப் போட்டுக்கொண்டு நோட்டரி பப்ளிக்காக இருந்து வருகிறார் கதையின் நாயகன் சரவணன். நீதிமன்றத்துக்குள் வழக்காடும் வழக்கறிஞர் எவரும் அவரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை […]

Read More
July 17, 2025

TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !

0 196 Views

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது.  இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த […]

Read More
July 17, 2025

டிரெண்டிங் திரைப்பட விமர்சனம்

0 836 Views

மனித மனம் வக்கிரங்கள் நிறைந்தது. அடுத்தவர் வாழ்க்கைக்குள் எட்டிப்பார்த்து அவர்களின் உணர்ச்சிகளைக் களவாடும் எண்ணம்தான் இன்றைக்கு உலகமெங்கும் டிரெண்ட் ஆக இருக்கிறது. அதை வைத்தே இன்றைய ஆன்லைன் யுகம் யூடியூப் முதற்கொண்டு எல்லாவற்றிலும் டிரெண்டிங் ஆக்குவதற்காக எந்த எல்லைக்கும் சென்று கொண்டிருக்கும் ஆபத்தை ஒரு அபாய சங்காக ஊதி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ்.என். ஆனால், அதையும் இன்றைய டிரெண்டிங் நிலையிலேயே ‘ பிக்பாஸ்” பாணியில்  சொல்லி இருப்பதுதான் இப்படத்தின் ரசிக்கத்தக்க அம்சம். காதல் மணம் புரிந்த கலையரசனும், […]

Read More
July 17, 2025

ஜென்ம நட்சத்திரம் திரைப்பட விமர்சனம்

0 475 Views

வழக்கமான பேய்ப் பட டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆனால் இதில் ஆவி எடுக்கும் உயிர்களை விட வில்லன் எடுக்கும் உயிர்கள் அதிகம்.  எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்று கடைசியில் அதற்கு மொக்கையான ஒரு காரணமும் சொல்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன் . நாயகனாக தமன் ஆக்ஷன், அவருக்கு இயக்குனராகும் கனவு இருக்கிறது, அதே அளவுக்கு அவர் கண்டிஷனும் போடுவதால் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றித் திரிகிறார். கூடவே மால்வி மல்கோத்ராவுடனான நட்பும், காதலும் கூட இருக்கிறது.  இவர்களின் நண்பர்கள் […]

Read More
July 16, 2025

96 பிரேம்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது..!

0 195 Views

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.  உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை […]

Read More
July 16, 2025

Samsung Days Sale Kicks Off on July 12

0 225 Views

Samsung Days Sale Kicks Off on July 12: Will Unlock AI-Powered Living with Unbeatable offers across Categories Experience exclusive discounts, bank cashback, freebies, and more on the Latest AI TVs, Smartphones, Laptops, and Home Appliances CHENNAI– July 16, 2025 – Samsung, India’s largest consumer electronics brand, announced the launch of the Samsung Days Sale, going […]

Read More