November 25, 2025
  • November 25, 2025
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 6, 2025

பரிசு திரைப்பட விமர்சனம்

0 116 Views

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிறைய நடந்து வரும் இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான படம்.  ஆண்கள் என்றால் நாட்டுக்கு… பெண்கள் என்றால் வீட்டுக்கு… என்கிற தத்துவத்தை மாற்றி பெண்களால் வீட்டையும், நாட்டையும் ஒரு சேரக் காக்க முடியும் என்ற கருத்தைக் கொண்டு பெண்மணியான கலா அல்லூரி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்தும் இருக்கும் படம் இது.  கல்லூரியில் படிக்கும் புதுமுகம் ஜான்விகாவை அவரது தந்தை ஆடுகளம் நரேன் பல வித்தைகளையும் கற்பித்து வீரமுள்ள பெண்ணாக […]

Read More
November 6, 2025

வட்டக்கானல் திரைப்பட விமர்சனம்

0 346 Views

கொடைக்கானல் மலையில் இருக்கும் எழில் மிகு வட்டக்கானல் பகுதியில் நடக்கும் கதை. ஆனால், கதை அந்த அழகைப் பற்றியதல்ல..! அங்கே விளையும் போதைக் காளானைக் கைப்பற்றி காலம் காலமாக விற்று ஒரு போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது எல்லா அடாவடி வேலைகளுக்கும் அவர் எடுத்து வளர்த்த துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் காவலர்களாக இருக்கிறார்கள். ஆனால், ஆர்.கே.சுரேஷைக் கொல்ல எப்போதும் வித்யா பிரதீப் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் பின்னணி […]

Read More
November 4, 2025

ஆயுர்வேத சிகிச்சையிலும் முத்திரை பதிக்கும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்..!

0 54 Views

அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது..! துல்லியமான ஆயுர்வேத சிகிச்சைகளை முன்னேற்றுவதில் ஒரு புதிய மைல்கல்..! சிக்கலான தொற்றாத நோய்கள் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான துல்லியமான ஆயுர்வேத அடிப்படையிலான உள்நோயாளி மற்றும் வெளிநோயாளி மருத்துவ சேவைகளை வழங்குகின்ற நவீன உபகரணங்களுடன் கூடிய 35 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைத் தொடங்கியது..! சென்னை, நவம்பர் 3, 2025: அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின், துல்லிய ஆயுர்வேத மருத்துவமனைகள் சங்கிலியான அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், சென்னை, […]

Read More
November 3, 2025

கலப்பை 10 – ம் ஆண்டு விழாவில் 10 பெண்களுக்கு ஆட்டோக்களை வழங்கிய பி.டி.செல்வகுமார்..!

0 51 Views

*சமூகச் செயற்பாட்டாளர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழாவில் ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!* பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ’வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம். ஏழை எளிய […]

Read More
November 3, 2025

தேசிய தலைவர் திரைப்பட விமர்சனம்

0 124 Views

பல தலைவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருந்த இனத்தின் குறியீடாக அடையாளம் இருக்கும். ஆனால், ‘ இவர் அப்படிப்பட்டவர் அல்ல, இந்த தேசத்துக்கே சொந்தமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்…’ என்பதை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிறுவுகிறார் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆர்.அரவிந்தராஜ். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கும் கதையில் சுதந்திர தாகத்துடன் அதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த முத்துராமலிங்க தேவர், சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவில் காங்கிரசிலிருந்து விலகி ஃபார்வேர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது […]

Read More
November 3, 2025

ராம் அப்துல்லா ஆண்டனி திரைப்பட விமர்சனம்

0 164 Views

மும்மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் சினிமா அகராதிப்பாடி நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படி மேல்நிலை வகுப்பில் படிக்கும் ராம் என்கிற அஜய் அர்னால்டு, அப்துல்லாவாக வரும் அர்ஜுன், ஆண்டனியாக வரும் பூவையார் மூவரும் நண்பர்கள். ஆனால், படிக்கும் வயதில் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு… சினிமாவுக்குப் போகிறார்களா என்று கேட்கிறீர்களா? அது பரவாயில்லையே..? பெரும் பணக்காரர் வேல ராமமூர்த்தியின் பேரனைப் பள்ளியிலிருந்து கடத்தி வெட்டிக் கொல்கிறார்கள். அதற்கு ஒரு நியாயம் பின் பாதியில் சொல்லப்படும் என்றாலும் இது கொஞ்சம் […]

Read More
November 2, 2025

பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள் – இன்று..!

0 64 Views

நவம்பர் 2 – பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள்: நீதிக்கான உலகளாவிய அறைகூவல்..! சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பும் (IFJ) அதன் உலகளாவிய அங்கத்தினர்களும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாளாக அனுசரிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இந்த நினைவு நாளை அறிவித்து 12 ஆண்டுகள் ஆகியும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அச்சுறுத்தலும் வன்முறையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், தங்கள் உடைகள் அல்லது மேலங்கியில் […]

Read More