சூர்யாவை சிங்கமாக அதிரி புதிரி ஆக்ஷனில் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஜெய்பீம் மாதிரியான படங்களில் அமைதியான ஆழமான நீதிமானாகவும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு முகங்களுமே ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவையாக இருக்க இந்த இரண்டையும் கலந்து ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பட ஆரம்பமே திடுக்கிட வைக்கிறது. சூர்யா ஒருவரை கொலை செய்து விட்டார் என்று அவரது அம்மா சரண்யாவுக்கு தகவல் வர, தன் கணவர் சத்யராஜிடம் அவர், “நம்ம புள்ள ஒரு கொலை பண்ணிட்டானாம்…” என்று சொல்ல […]
Read Moreசென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதய பிரிவு மருத்துவர் குழு, முதல் முறையாக இரட்டை அறை பேஸ்மேக்கர் கருவியை அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அதுவும் இந்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நோயாளர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 92 வயது கொண்ட முதியவர் ஒருவர் அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அடிக்கடி மயக்கம் அடையும் பிரச்சினையால் வந்தார். அவரது இதயம் முழுமையாக அடைபட்டு நிமிடத்திற்கு 33 […]
Read More2012ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அல் ஷிபா, பிரத்தியேகமான சீன கண்ணாடிக் கோப்பை ( Cupping) சிகிச்சையில் சிறந்த பயிற்சி மற்றும் பட்டம் பெற்ற பணியாளர்களைக் கொண்ட கைதேர்ந்த சிகிச்சையகத்தை நடத்தி வருகிறது. சிறந்த அனுபவமிக்க பணியாளர்களின் துணைகொண்டு உலக தரத்திலான கப்பிங் சிகிச்சை மற்றும் அது தொடர்பான பல்வகை சேவைகளை வழங்குகிறது. மேலும் சிகை முகப் பராமரிப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான சேவையில் 20 வருடங்கள் அனுபவம் பெற்ற முன்னணி நிறுவனமான அல் ஷிபாவுக்கு உலகம் முழுவதிலும் […]
Read Moreஇயக்குநர் பாலாவும், அவர் மனைவி முத்து மலரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதியன்று இருவரும் சட்டபூர்வமாக, சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள். இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பாலாவும், அவரது மனைவியும் பிரிந்து […]
Read Moreரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற, இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார். பிரிவினைவாத கிழக்குப் […]
Read Moreஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன் , அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம். இதுபோன்ற படங்கள் திரைப்படவிழாக்களிலும் , விருதுகளுக்காகவும் […]
Read Moreவீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு ‘லத்தி’ என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். வழக்கம் போல் அறிமுக இயக்குனர் வினோத்தின் டைரக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை சுனைனா நாயகியாக நடித்து வர. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் வெளியாக இருக்கிறது. சி.முருகானந்தம் என்கிற போலீஸ் ரோலில் விஷால் நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பிரபல ஸ்டண்ட் […]
Read More