இந்த மல்லுவுட்காரர்களுக்கு இருக்கும் நக்கல் வேறு யாருக்கும் வராது. இதுவும் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு (ரெட் ஜயண்ட் புண்ணியத்தால்) தமிழ் பேசி வந்திருக்கும் படம்தான். இதில் என்ன நக்கல் என்கிறீர்களா? தலைப்பைப் பார்த்ததும் ஏதோ தெலுங்குப் படம் என்றுதான் நமக்கு தோன்றும். ஆனால் ஹைதராபாத்தில் நடக்கும் ஒரு காதல் படம் என்பதால் அப்படி நக்கலாக ‘லு’ போட்டு டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குனர். அத்துடன் ஒரு ரொமான்டிக் காமெடி படத்துக்கு இதை விடப் பொருத்தமான தலைப்பை வைக்க முடியாது. காதலுக்குக் […]
Read Moreபட ஆரம்பத்தில் இருந்து மூன்று கதைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதல் கதையில் அகோரி குழுவில் வளரும் நாயகன் விஸ்வக் சென்னை, அந்த அகோரி குழுவினர் வெளியேறச் சொல்கின்றனர். காரணம், அவருக்கு மனிதர்கள் தொட்டால் சிலிர்த்து மயக்கம் வரும் வினோதமான உடல் தன்மை இருக்க, அது தெய்வத்தின் சாபம் என்பதால் அவரை அகோரிகள் விரட்டுகின்றனர். அங்கு இருக்கும் நல்ல மனம் கொண்ட அகோரி ஒருவர், வாரணாசி சென்று அவரை அங்கு விட்டுச் சென்ற பாபாவை சந்தித்தால் இந்த சாபத்தின் […]
Read More‘ரெபல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !! ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் […]
Read Moreவில்லன்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆத்மா பேயாகி தன் பழியைத் தீர்த்துக் கொள்ளும் கதை ஒன்றும் புதிதில்லை. அதற்கு அந்தப் பேய் உயிருடன் இருக்கும் ஹன்சிகாவைப் பயன்படுத்திக் கொள்வதிலும் எந்த புதிய சிந்தனையும் இல்லை. ஆனால் பேய் என்றாலே கொடூரமாகவும் அவலட்சனமாகவும் இருக்க வேண்டுமா..? ஹன்சிகாவைப் போல் அழகான பேய், உலகில் இருக்காதா..? என்று இயக்குனர்கள் சபரியும் குரு சரவணனும் நினைத்திருப்பது ஒன்று மட்டும்தான் இதில் புதிய ஐட்டம். பிறந்ததிலிருந்து ஹன்சிகா ஒரு அதிர்ஷ்டக் கட்டையாம். […]
Read Moreபடத்தைப் பார்த்துவிட்டு முகம் சுளித்து, தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களை பத்தாம் பசலிகள் லிஸ்டில் சேர்த்துவிடலாம். ஆக்கத்தில் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்திருக்கிறது இந்தப் படம் என்று கட்டியம் கூறியே ஆரம்பிக்கலாம். நடுத்தர வர்க்க குடும்பங்களில் “அடுத்து என்ன..?” என்று யோசிக்க வேண்டிய அடாலசன்ஸ் பருவத்தைத் தாண்டிய இளைஞர்களைப் பற்றிய கதை இது. காமம் மனத்தில் அடர்த்தியாக நிற்க, வாழ்வில் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று புரிய வழிகாட்டுதல் இல்லாத […]
Read Moreஅனைத்து உயிர்களும் போற்றி வணங்கத்தக்க ஒரு ஜீவன் ‘ அம்மா’. அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்து கணவனையும் இழந்த கைம்பெண்கள் அந்தக் குழந்தைகளை வளர்க்கப்படும் பாடு கண்ணால் காணாத தெய்வத்திற்கு ஒப்பானது. கண்ணில் கண்ட தெய்வமான அந்தத் தாயின் நிலை கடைசியில் எப்படி ஆகிறது என்பதை உணர்வுகள் கொப்பளிக்கப் படமாக வடித்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. அந்த தாயின் பாத்திரத்தில் வாழ்ந்தே முடித்திருக்கிறார் ஊர்வசி. கமல், ஊர்வசி போன்றவர்கள் சரியாக நடிக்கவில்லை […]
Read Moreதிருச்சிக்கு அருகில் இருக்கும் அரிமா பட்டி என்கிற ஊரில் ஒரு பிளாஷ் பேக்குடன் தொடங்குகிறது படம். சாதி விட்டு சாதி திருமணம் செய்த குற்றத்திற்காக ஒரு காதல் ஜோடியை பஞ்சாயத்தில் வைத்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, அதை எதிர்த்து அதே ஊரில் வாழ முற்படுகிறது ஜோடி. ஊர்ப்பொதுவில் வைத்து அதற்கு சம்மதம் சொல்லிவிட்டு அன்று இரவு அவர்கள் வீட்டுக்குள் போகும் ஒரு கும்பல் அவர்களைக் கொன்று தீர்க்கிறது. அந்த அளவுக்கு சாதி வெறி தலைக்கு ஏறிய […]
Read More