July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு
October 25, 2020

இன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு

By 0 566 Views

நயன்தாராவை கதை நாயகியாக கொண்டு, காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இந்தப் படத்தை பாலாஜி இயக்கி இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா இருவருடனும், இப்படத்தில் மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அஜய் கோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், வரும் தீபாவளி விடுமுறைக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் இத்திரைப்படம் வெளியிடப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (அக்.25) சென்னை – பெங்களூர் அணிகளுக்கிடையிலான டி20 ஆட்டத்தின்போது வெளியிடப்பட இருப்பதாக படக்குழுவினர்  அறிவிதிருக்கிறார்கள்.

நயன் தாரா மேட்சுக்கு வருவாங்களா..?