August 31, 2025
  • August 31, 2025
Breaking News
June 13, 2021

தேசிய விருது நடிகர் விபத்தில் படுகாயம்

By 0 520 Views

கன்னடப் படவுகைச் சேர்ந்த பிரபல சஞ்சாரி விஜய். இவர் ‘ரங்கப்பா ஹோபிட்னா’, ‘தசவலா’, ‘ஹரிவு’, ‘கில்லிங் வீரப்பன்’, ‘நானு அவனல்ல..அவளு’உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார்.

‘நானு அவனல்ல.. அவளு’ படத்தில் திருநங்கை யாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இவர் நேற்று தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் தலையிலும் தொடையிலும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தமிழ் நாட்டில் கூத்துப்பட்டறை போல் கர்நாடகாவில் சஞ்சாரி என்ற நாடகக் குழு பெருமை வாய்ந்தது. அங்கே பயிற்சி பெற்று திரையுலகுக்கு வந்ததால் அவர் சஞ்சாரி விஜய் என்றே அழைக்கப் படுகிறார்.