November 22, 2024
  • November 22, 2024
Breaking News
November 23, 2018

மான்ஸ்டர் படத்தில் இமேஜ் மாறும் எஸ்.ஜே.சூர்யா

By 0 906 Views

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ள பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும்.

‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி அவரிடம் கேட்டால்…

“இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதைப் பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.

Monster

Monster

ஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதுடன் அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இதுபற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது..!” என்கிறார்.

படத்தின் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா, நாயகியாக ப்ரியா பவானி ஷங்கரைத் தேர்வு செய்த காரணத்தைக் கேட்டால்,

“நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அவர் எஸ்.ஜே.சூர்யாதான் என்று முடிவு செய்தோம். அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரின் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார்.

Monster Shooting

Monster Shooting

நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார். கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்..!” என்கிறார்.

படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைக்க, ஒளிப்பதிவை கோகுல் பெனாய் ஏற்கிறார். படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில்…

நெல்சன் சொல்வதிலிருந்து குமரிகளைக் கவரும் இமேஜ் கொண்ட எஸ்.ஜே.சூர்யா இந்தப்படத்தில் குழந்தைகளைக் கவரும் இமேஜுக்கு மாறுகிறார் என்பது புரிகிறது.