April 19, 2025
  • April 19, 2025
Breaking News
April 12, 2020

உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் – முக ஸ்டாலின் கடிதம்

By 0 823 Views

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சற்றுமுன்னர் தனியார் தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்களை தாங்களாகவே விநியோகம் செய்ய கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

லாக்டவுன் காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்! இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்! ‘கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!’

மேலும் முக ஸ்டாலின் எழுதிய கவிதை பின்வருமாறு:

ஏழை மக்களுக்கு உணவுப்‌

பொருட்கள்‌ வழங்கினால்‌

நடவடிக்கை- தமிழக அரசு.

தானும்‌. செய்யமாட்டேன்‌,

மற்றவர்களும்‌ செய்யக்‌ கூடாது

என்பது இந்த ஆட்சியின்‌ வஞ்சகம்‌.

கூட்டம்‌ சேர்வதை

ஒழுங்கு படுத்தலாம். உதவியே

செய்யக்கூடாது என்று எப்படி

உத்தரவிட முடியும்‌?

மக்களின்‌ கண்ணீர்‌ துடைக்கத்‌ தமிழ்‌

மக்களின்‌ கரங்கள்‌ நீளும்போது,

அதைத்‌ தடுக்க எவராலும்‌ இயலாது;

தடுக்க நினைப்பது

சர்வாதிகாரத்தனம்‌!

‘கருணையில்லா ஆட்சி

கடிந்தொழிக!’ என்ற வள்ளலார்‌

வார்த்தைகளால்‌ எச்சரிக்கை

செய்கிறேன்‌.