November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நிறைய நடிகர்கள் வாழ்த்த வர்ரேன்னாங்க ஆனா வரலை – ஜித்தன் ரமேஷ்
February 10, 2020

நிறைய நடிகர்கள் வாழ்த்த வர்ரேன்னாங்க ஆனா வரலை – ஜித்தன் ரமேஷ்

By 0 603 Views
‘டேக் ஓகே கிரியேஷன்ஸ்’ வழங்கும் படம் ‘மிரட்சி’. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக  நடித்துள்ள இப்படத்தை எம்.வி. கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜீவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
 
படத்தின் தயாரிப்பாளர் ராஜன் விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். மேலும் படக்குழுவினர் பேசியதிலிருந்து…

நாயகி ஹீனா ஸஹா –

“இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்போதுதான் பார்த்தேன்..1”

இயக்குநர் எம்.வி. கிருஷ்ணா –

“இது சின்னப்படமாக துவங்கி பெரிய படமாக வளர்ந்துள்ளது. இந்தப்படம் இயக்குநர் படம் கிடையாது. நிச்சயம் தயாரிப்பாளர் படம்தான். அவர் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தில் ரமேஷ் வில்லன் மட்டும் அல்ல. அவர் ஹீரோவும் கூட. இந்தப்படத்திற்கு பிறகு ரமேஷ் பெரிதாக கவனிக்கப்படுவார். நாயகி ஹீனாவிற்கு ஒரு ப்ரைட் ப்யூச்சர் இருக்கிறது..!”

ஜித்தன் ரமேஷ் பேசியதாவது,

“இந்த விழாவிற்கு நிறைய ஆர்ட்டிஸ்டைக் கூப்பிட்டிருந்தேன். வர்றேன் என்றார்கள். ஆனால் பிஸி காரணமாக வரவில்லை. என் தம்பி ஜீவாவை கடைசி நேரத்தில் தான் கூப்பிட்டேன். வந்துவிட்டார். அவருக்கு நன்றி. வம்சி என்னிடம் கதை சொல்லும் போது ஹீரோவாக நடிக்க தான் கேட்டார். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ராஜன் சார் இப்படத்தை பெரிய படமாக மாற்றி விட்டார். இசை அமைப்பாளர் பெயர் இங்கு தான் ஆனந்த். ஆந்திராவில் மந்த்ரா ஆனந்த்.  அவரை ஆந்திராவில் அனைவருக்கும் தெரியும்..!”

ஜீவா பேசியதாவது,

“இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் டேலண்ட்டும் எதோ ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு ‘டர்’ ஸ்டைலில் ஷாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும்.

 
நான் ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது அப்படத்தின் ஆர்ட் டைரக்டரிடம், ஆண்டி ஹீரோ என்பதைப் பேசினேன். அப்போது ஒரு லோக்கல் ஆள் ஆண்டி என்றால் அத்தை தானே? என்று கேட்டார். அப்போது ஆடியன்ஸ் அவ்வளவு   வெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள்.
 
ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர்  மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்..!”