April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஸ்வாசம் வரிசையில் மெகந்தி சர்க்கஸ் இருக்கும் – கரு பழனியப்பன்
January 25, 2019

விஸ்வாசம் வரிசையில் மெகந்தி சர்க்கஸ் இருக்கும் – கரு பழனியப்பன்

By 0 646 Views

கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பில் ராஜு முருகனின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் பேசியதிலிருந்து…

ஞானவேல் ராஜா :

வெற்றிமாறன், பாண்டியராஜ் சார் ஆகியோர் அட்டகத்தி படத்தை ப்ரோமோட் செய்து வெற்றி பெற செய்தார்கள். அந்த படத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. அந்த எனர்ஜி தற்போது மீண்டும் இந்த படத்தில் கிடைத்துள்ளது.

சமுதாயத்தில் பேச தயங்கும் பிரச்னைகளை ராஜு முருகன் ஜிப்ஸியில் பேசியுள்ளார். அவரது சேவை தொடர வேண்டும்.

இந்த படத்திற்கு அவரின் பங்கு பெரிது. விழா நாயகன் சான் ரோல்டனின் இசைக்கு நான் அடிமை. இவர்களின் நட்பு தொடர வேண்டும் என கூறினார்.

கரு. பழனியப்பன் :

சரவணன், யுகபாரதி, ராஜு முருகன் ஆகியோர் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார்கள்.

சரவணன் இயக்குனராக ஆசைப்பட்டு அவரது தம்பி ராஜு முருகனை இயக்குனராக்கினார். தற்போது சரவணனும் இயக்குனராகி விட்டார்.

இருப்பதிலேயே கஷ்டமான தொழில் சமைப்பது தான். அதில் திறமை வாய்ந்தவர் ஹீரோ ரங்கராஜ். இந்த படத்திலும் அவர் அறுசுவை விருந்தாக படத்தை கொடுப்பார்.

தற்போது விஸ்வாசம் போன்ற குடும்ப படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் இருக்கும்.

யுகபாரதி :

என்னுடைய கவிதை அரங்கேறும் நாள் இன்று. எனக்கு சினிமாவில் பலரை அறிமுகப்படுத்தியவர் சரவணன். சரியான நண்பர். ராஜு முருகன் தேசிய விருது வாங்கிய போது எனக்கு சரவணன்தான் நினைவிற்கு வந்தார்.

50, 60 ஆண்டுகளுக்கு பெயர் சொல்லும் இயக்குனராக சரவணன் இருப்பார். எனக்கு நல்ல சினிமா, அரசியல், கவிதை என அனைத்தையும் கொடுத்தது சரவணன் தான்.

இயக்குனர் பாக்யராஜின் உதவி இயக்குனராக வேண்டும் என்பது சரவணனின் ஆசை. அது நடக்கவில்லை. ஆனால் அவரது வாழ்த்து சரவணன் படத்திற்கு கிடைத்துள்ளது.

ராஜு முருகன் :

இது எனக்கு நெகிழ்ச்சியான மேடை. என்னை உருவாக்கியவர்கள் யுகபாரதியும் சரவணனும்தான் .

சரவணினின் கிரியேட்டிவிட்டி அளப்பரியது. ஜோக்கர், ஜிப்ஸி என என் அணைத்து படத்திற்கும் இவர்களின் பங்கு உண்டு. கதை, வசனம் என என் பெயர் இருந்தாலும் இது சரவணனின் படம்.

மெஹந்தி சர்க்கஸ் படம் உருவாக முக்கிய காரணம் ஈஸ்வரன் மற்றும் ஞானவேல் ராஜா தான்.இப்படம் எண்களின் தம்பி ஸ்டாலினுக்கு சமர்ப்பணம். அவர் தற்போது எங்களுடன் இல்லை.

நாயகி ஸ்வேதா :

இந்த படத்தில் நடிக்க வாய்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவர்க்கும் நன்றி.

ரங்கராஜ் :

இது எனக்கு முதல் மேடை. சரவணன் படத்தில் ஹீரோவானது மகிழ்ச்சி. இது கடவுள் கொடுத்த வரம். மீண்டும் அவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.

இயக்குனர் சரவணன் :

யுகபாரதி, கரு பழனியப்பன், ராஜு முருகனிடம் பேச கற்று கொள்ள வேண்டும். நலன் குமாரசாமிக்கு உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றினார்கள். சான் ரோல்டன் இசை படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஸ்வேதா இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார்.

பாக்யராஜ் :

கரு. பழனியப்பன் சரவணினின் வாழ்க்கை வரலாற்றையே கூறி விட்டார். சினிமாவில் சாதித்த அனைவருடனும் சரவணன் பழகியுள்ளார்.

சரவணன் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். படத்தின் வெற்றி விழா கண்டிப்பாக நடக்கும். படம் உருவாக காரணமாக இருந்த ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

சிவகுமார் :

ஈஸ்வரன் பெற்ற மகன், நான் பெறாத மகன் ஞானவேல் ராஜா. சூரியா, கார்த்தி மற்றும் பல நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களை கொடுத்தவர் ஞானவேல் ராஜா. அந்த படங்களின் வரிசையில் மெஹந்தி சர்க்கஸ் படமும் இருக்கும்..!