February 27, 2021
  • February 27, 2021
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நமீதாவை வைத்துக்கொண்டு எப்படி மாலை போட்டார் – கே.பாக்யராஜ் அதிர்ச்சி
January 25, 2019

நமீதாவை வைத்துக்கொண்டு எப்படி மாலை போட்டார் – கே.பாக்யராஜ் அதிர்ச்சி

By 0 351 Views
‘அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்’ சார்பாக அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் ‘கபடி வீரன்’.
 
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா, தொழிலதிபர் தமிழ்செல்வன், நடிகர்  பானுச்சந்தர் ,அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட படக் குழுவினருடன்  திரையுலக வி.ஐ.பிகள்  கே.பாக்யராஜ் , ராதாரவி, ஜாகுவார் தங்கம் , நமீதா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
விழாவில் கே.பாக்யராஜ் பேசியதிலிருந்து…
 
“நமீதாவின் மச்சான்ஸ் வீரா என்னிடம் இந்த மேடையில் அருகில் அமர்ந்து பேசும் போது ,  மலைக்கு மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கிறேன் . அடுத்த மாசம் தான் கோயிலுக்கு போறேன் என்ற போது எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. ‘இப்படி ஒரு அழகிய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு நாள் கணக்கில் விரதமிருப்பது ரொம்ப கஷ்டமாச்சே..’என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
 
இதே சீக்குவன்ஸ் என் ஒரு படத்துல கூட இருக்கும். நமீதா மாதிரி ஒரு பெண்மணி அந்தப் படத்துல சும்மா தேரு மாதிரி வருவாங்க வயசான ரெண்டு டிக்கெட்டுங்க அந்தம்மா கிராஸ் ஆகற வரைக்கும் அப்படியே பார்த்துட்டு இருப்பாங்க, அப்புறம் , அவங்க குள்ளாற “எப்படிய்யா ? இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி, விட்டுட்டுட்டு அவன் துபாய்ல போய் கிடக்குறான் ? எப்படிய்யா அவனால முடியுது ? நம்மளை எல்லாம் பக்கத்து ஊருல வேலைக்காக கொண்டு போய்விட்டாக் கூட மதியம் சாப்பாட்டிற்கோ ., இல்லை இராத்திரி சாப்பாட்டிற்கோ வீட்டிற்கு வந்துடுவோம் … அவன் எப்படி வருஷ கணக்கில துபாய்ல போய் கிடக்குறான்..?” என தங்களுக்குள் ஆராய்ச்சியாக பேசிப்பாங்க. எனக்கு அந்த சீன் ஞாபகம் வந்துடுச்சி .
 
இந்தப் படத்தோட பைட் மாஸ்டரையும் பாராட்டணும். இங்க போட்டு காட்டின சீன்களை வச்சி பார்க்கிறப்போ படம் முழுக்க ஒரே ஆக்ஷனா தான் மெயினா இருந்தது. நடிகர்அதிரடி அரசு அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதே மாதிரி டான்ஸ் மாஸ்டரையும் பாராட்டி சொல்லணும். அவரு ஒரு வேலை பண்ணி யிருந்தார். என்னன்னா நான் டான்ஸ் ஆடினா எக்சர்சைஸ் மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க. அவரு எக்சசைஸையே டான்ஸாக்கிட்டாரு..!”
 
நடிகர் டத்தோ ராதாரவி .,
 
“நான் நிறைய அட்வைஸ் பண்ணுவேன். ஆனா யாரும் கேட்கறதில்லே. இங்க வந்து இருக்கிற பவர் ஸ்டார் சீனிவாசன் ஹீரோவா நடிக்கப்போறேன், படம் தயாரிக்கப் போறேன்னப்போ “வேண்டாம், காமெடியனா நடிங்க நல்லா இருக்கும்னு எவ்ளவோ சொன்னேன் கேட்கலை. எப்பவுமே நல்லது சொன்னா கேட்க மாட்டாங்க. அதுல சீனிவாசன் ஒரு முக்கியமான ஆளு தேவை இல்லாத பிரச்சினையில எல்லாம் சிக்கி மீண்டு வந்து இப்போ காமெடியனா வலம் வந்துட்டு இருக்கார். காமெடி நடிகரா வளர்ந்துட்டு இருக்கார். இதைத் தான் நான் அப்பவே சொன்னேன். அதனால சில இடங்கள்ல என்னைப் பார்க்கம கூட போயிடுவார். ஆனா நான் விடமாட்டேன். நமக்கு எல்லாமே பேஸ் டூ பேஸ் தான்.
 
அதே மாதிரி ,நம் சினிமா குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது என்றாலும் நான் தான் முதல் ஆளாக நிற்பேன். நடிகர் விஷாலிடம் கூட போனில் ஏதாவது முக்கிய பிரச்சினை என்றால் அவ்வப்போது பேசுகிறேன். சிலர் தூண்டி விட்டு ஓடி விடுவார்கள். நான் அப்படி கிடையாது. ஓடி ஒளிவது எனக்குப்பிடிக்காது..!”