சினிமா தியேட்டரில் சமூக இடைவெளி வேண்டும் என்று சொல்லிதான் அரசு அனுமதி கொடுத்துள்ளது..
ஆனால் உள்ளூர் தியேட்டர் களில் அப்படி ஒரு விஷயமே கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இன்று மாலை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் டீசர் வெளியீட்டின் போது நடந்தக் காட்சியைப் பாருங்களேன்.
இப்படி நெருக்கி அடித்து இணையும் கூட்டத்தை அந்த இயக்குனர் செல்பியும் எடுத்திருக்கிறார். அதை இணையத்திலும் பரவ விட்டிருக்கிறார்.
இதை அரசு கவனத்துக் கொண்டு போனால் அந்த தியேட்டரே சீல் வைக்கப்படும் என்பதை அறிந்தேதான் இச்செயலை செய்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
டீசருக்கு இந்த கதி என்றால் மாஸ்டர் படம் வெளியானால் என்ன ஆகும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
இயக்குனர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம்.